கோவையில் பல்வேறு இடங்களில் இந்திய ஜனநாயக கட்சி கொடியை அக்கட்சியின் மாநில மகளிர் அணி தலைவி லீமா ரோஸ் மார்ட்டின் ஏற்றி வைத்தார்..
தேர்தல் முடிந்த நிலையில்,இந்திய ஜனநாயக கட்சியின் கொடிக்கம்பங்கள் புதுப்பிக்கப்பட்டு, அனைத்து பகுதிகளிலும் கொடியேற்று விழா நடைபெற்று வருகிறது ..
இதன் ஒரு பகுதியாக,கோவை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் கட்சி கொடி ஏற்றுதல் நிகழ்ச்சி நடைபெற்றது.
முன்னதாக துடியலூர் பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாநில இணை பொது செயலாளரும், மாநில மகளிர் அணி தலைவியுமான லீமா ரோஸ் மார்ட்டின் கலந்து கொண்டு கட்சி கொடியை ஏற்றி வைத்தார்..
இதனை தொடர்ந்து கோவை விமான நிலையம் அருகே உள்ள கட்சி கொடி கம்பத்தில் கட்சி கொடியை அவர் ஏற்றி வைத்தார்..
நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில்,
இந்திய ஜன நாயக கட்சியின் மாநில மாநாடு விரைவில் நடைபெற இருப்பதாகவும்,இதனை சிறப்பாக நடத்துவது குறித்த மாநில நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் கோவையில் விரைவில் நடைபெற உள்ளதாக தெரிவித்தார்..
இந்நிகழ்ச்சியில் மாநகர் மற்றும் புறநகர் மாவட்ட நிர்வாகிகள்,மகளிர் அணியினர் மற்றும் தொண்டர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்