மதுரையில் தேசிய மாணவர் படை கமாண்டரிடம் மரக்கன்றுகள் வழங்கிய வழிகாட்டி மனிதர்கள் அறக்கட்டளை காந்தி அருங்காட்சி
யகத்தில் காந்தியடிகளின் 155 வது பிறந்தநாளை முன்னிட்டு வழிகாட்டி மனிதர் கள் அறக்கட்டளை நிறுவனர் வழிகாட்டி மணிகண்டன் தலைமையில் மரியாதை செலுத்தப்பட்டது.
பின்னர் கல்லூரிகளை ஒருங்கிணைத்து தேசிய மாணவர் படையினரின் தூய்மைக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் அதன் கமாண்டர் சௌகான் மற்றும் துணை கமாண்டர் சிவக்குமார் ஆகியோரிடம் மணிகண்டன் மரக்கன்றுகள் வழங்கினார்.
அவர்கள் இவரது பசுமை பணிகளுக்கு வாழ்த்தும் நன்றியும் தெரிவித்தனர்.
இந்நிகழ்ச்சியில் பேராசிரியர் முத்துராஜா, சமூக ஆர்வலர்கள் பாலாஜி, கலாம் மாயகிருஷ்ணன், ரமேஷ்குமார், ஈஸ்வரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.