கடலூர் மாவட்டத்தில் மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் தேதி ஒத்திவைப்பு மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா செந்தில்குமார்

கடலூர் மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மற்றும் தமிழ்நாடு மாநில ஊரக மற்றும் வாழ்வாதார இயக்கத்துடன் இணைந்து 05.10.2024 (சனிக்கிழமை) நடைபெறவிருந்த மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நிர்வாக காரணங்களுக்காக 19.10.2024 (சனிக்கிழமை) அன்று ஒத்திவைக்கப்படுகிறது.
இம்மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் 19.10.2024 (சனிக்கிழமை) அன்று பெண்ணாடம் லோட்டஸ் இன்டர்னேஷனல் பள்ளியில் காலை 9.00 மணி முதல் மாலை 3.00 மணி வரை நடைபெறவுள்ளது.
இம்முகாமில் 150-க்கும் மேற்பட்ட தனியார்துறை நிறுவனங்கள் கலந்து கொண்டு இருபதாயிரத்திற்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.எனவே இம்முகாமில் மாவட்டத்தைச் சார்ந்த எட்டாம் வகுப்பு, பத்தாம் வகுப்பு பன்னிரெண்டாம் வகுப்பு.கலை மற்றும் அறிவியல், நர்சிங், வணிகப் பட்டதாரிகள். ஐ.டி.ஐ.
டிப்ளமோ மற்றும் பொறியியல் பட்டப்படிப்பு படித்துள்ள இளைஞர்கள் கலந்து கொண்டு பயன்பெறலாம்.
இவ்வேலைவாய்ப்பு முகாமின் வாயிலாக தனியார்துறையில் வேலைவாய்ப்பு பெறும் பயனாளிகளின் வேலைவாய்ப்பக பதிவு விவரங்கள் ரத்து செய்யப்பட மாட்டாது. இம்முகாமில் கலந்து கொள்ள விருப்பம் உள்ள வேலைநாடுநர்கள் தமிழ்நாடு தனியார்துறை வேலைவாய்ப்பு இணையதளமான www.tnprivatejobs.tn.gov.in-ல்
பதிவு செய்து கலந்து கொள்ளலாம். தங்களின் பாஸ்போர்ட் அளவு புகைப்படம்.கல்வி சான்றிதழ்கள். ஆதார் அட்டை மற்றும் சுய விவர குறிப்புடன் முகாமில் நேரடியாக கலந்து கொள்ளலாம்.
முகாம் தொடர்பான கூடுதல் விவரங்களை அறிய மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தை நேரிலோ அல்லது தொலைபேசி 9499055907, 9499055908 வாயிலாகவோ தொடர்பு கொள்ளலாம். (04142-290039),
எனவே மாவட்டத்தில் உள்ள வேலை தேடும் இளைஞர்கள் மற்றும் வேலையளிக்கும் தனியார்துறை நிறுவனங்கள் 19.10.2024 (சனிக்கிழமை) அன்று நடைபெறும் மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமினை பயன்படுத்திக் கொள்ளுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா செந்தில்குமார் .
தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *