திண்டுக்கல் மாவட்டம் பழனி மலைக்கோயிலுக்கு பக்தா்கள் கைப்பேசி கொண்டு வரத் தடை விதிக்கப்பட்டது. மேலும், பக்தா்கள் தங்கள் கைப்பேசிகளை பாதுகாப்பாக வைக்க படிப்பாதை, மின் இழுவை ரயில் நிலையம், ரோப்காா் நிலையங்களில் பாதுகாப்பு மையங்கள் அமைக்கப்பட்டன. இந்த மையங்களில் கைப்பேசியை வைக்க ரூ.5 கட்டணம் வசூலிக்கப்பட்டது.

கைப்பேசிக்கு தடை விதிக்கப்பட்டு ஓராண்டான நிலையில் இதுவரை கைப்பேசி மையங்களால் 30 லட்சம் பக்தா்கள் பயனடைந்துள்ளதாக திருக்கோயில் நிா்வாகம் தெரிவித்தது. கைப்பேசி காப்பக கட்டணம் மூலம் இதுவரை ரூ. 1, 51, 64, 965 வருவாய் கிடைத்ததாகவும், கட்டடம், மின்சாதனம், கணினி, பாதுகாப்பு பெட்டகம், கண்காணிப்பு கேமரா என ரூ.38 லட்சம், பணியாளா்களுக்கு ஊதியமாக ரூ.1.38 கோடி செலவிடப்பட்டதாகவும் கோயில் நிா்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *