திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் பழம்புத்தூர் கிராமத்தை சேர்ந்த சந்திரசேகர் என்பவர் வீட்டில் இரண்டு குண்டு பல்புகள் மட்டும் உபயோகப்படுத்துவதாக சொல்லப்படுகிறது.
100 யூனிட்டுக்கு குறைவாக மின்சாரம் உபயோகப்படுத்துவதால், இவருக்கு தமிழக அரசு மூலம் மின்சாரம் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இவருக்கு மின்சார வாரியம் மூலம் குறுச்செய்தி வந்துள்ளது.
அதில் 9 ஆயிரத்து 200 யூனிட்கள் உபயோகப்படுத்தி இருப்பதால், ஒரு லட்சத்து, ஆயிரத்து 580 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும் என்று செய்தி வந்துள்ளது. இதை கண்டு அதிர்ச்சியைடந்த அவர், உதவி மின் பொறியாளரை அனுகியுள்ளார்.
அப்போது, கம்யூட்டரில் யூனிட்டை பதிவு செய்யும்போது 92 யூனிட் உடன்சேர்த்து கூடுதலாக இரண்டு ஜீரோ டைப் செய்ததால், இந்த கட்டணம் வந்ததாக பதில் அளித்துள்ளார்.