எஸ்.செல்வகுமார் செய்தியாளர்சீர்காழி
தமிழக அரசின் கலை மாமணி விருது சென்னையில் உள்ள சினிமா துறை சார்ந்தவர்களுக்கு வழங்கப்படுகிறது- தமிழ்நாடு இயல் இசை நாடக மன்ற மாநில தலைவர் சத்யராஜ் குற்றச்சாட்டு.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் அனைத்து நாட்டுப்புற கலைஞர்கள் நல சங்கத்தின் முப்பெரும் விழா சீர்காழியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் மாவட்டத் தலைவர் ரவிச்சந்திரன் நடைபெற்றது.
விழாவை ஒட்டி முன்னதாக சீர்காழி பழைய பேருந்து நிலையத்திலிருந்து நாட்டுப்புற கலைஞர்கள் பல்வேறு கடவுள்களின் வேடமனிந்தும், கோலாட்டங்கள், பல்வேறு வகையான இசை வாத்தியங்கள் முழங்க ஊர்வலமாக விழா நடைபெறும் அரங்கிற்கு வந்தனர்.
தொடர்ந்து அனைத்து நாட்டுப்புற கலைஞர்கள் நல சங்கம் தமிழ்நாடு கலைத்தாய் அனைத்து நாட்டுபுற கலைஞர்கள் மாநில சங்கம் இணைப்பு விழா மற்றும் மாநில மாவட்ட பொறுப்பாளர்கள் அறிமுக விழா மயிலாடுதுறை மாவட்ட மூன்றாம் ஆண்டு விழா ஆகியவை ஒரு சேர நடைபெற்றது. இதில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான நாட்டுப்புற கலைஞர்கள் பங்கேற்றனர்.
விழாவினைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்ற மாநில தலைவர் சத்தியராஜ் கூறுகையில்;
நாட்டுப்புற கலைஞர்களுக்கு அரசு பேருந்தில் 50 சதவீத பேருந்து கட்டணத்தில் சலுகை வழங்கப்பட்டது மட்டுமின்றி தங்களது இசைக்கருவிகளை தங்கு தடையின்றி பேருந்துகளில் எடுத்துச் செல்ல வழிவகை செய்யப்பட்டுள்ளது அதற்கு அரசுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். நாட்டுப்புற கலைஞர்களுக்கு வழங்கப்பட்டு வரும் உதவித்தொகையினை பெறுவதில் ஏராளமான நடைமுறை சிக்கல்கள் உள்ளது. அதனைப் போக்க மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலேயே அலுவலகம் அமைத்து அதில் நாட்டுப்புற கலைஞர்களை உறுப்பினராகக் கொண்டு உதவித்தொகை எளிமையாக கிடைத்திட வழிவகை செய்திட வேண்டும். பெண் கலைஞர்கள் 40 வயதை கடந்த நிலையில் அவர்களால் கலைத்தொழிலில் ஈடுபட முடியாத சூழலில் அவர்களின் பென்ஷன் உதவி தொகை காண வயதினை ஐம்பதாக நிர்ணயிக்க வேண்டும். தமிழக அரசு வழங்கும் உயரிய விருதான கலைமாமணி விருதினை சென்னையில் உள்ள சினிமா துறையினருக்கே வழங்கப்பட்டு வருகிறது. அதனை தமிழக முழுவதும், அனைத்து மாவட்டங்களிலும் உள்ள நாட்டுப்புற கலைஞர்களுக்கு கிடைக்கும் வகையில் வழிவகை செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டார்.