தென்பெண்ணை ஆற்றின் கரையோரம் வசித்து வரும் அனைத்து பொது மக்களும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என வருவாய் கோட்டாட்சியர் வில்சன் ராஜசேகர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கிருஷ்ணகிரி அணையில் இருந்து தென்பெண்ணை ஆறு வழியாக தண்ணீர் திறந்து விடப்பட்டு உள்ளது. இந்த வெள்ள நீரானது K.ஈச்சம்பாடி அணைக்கட்டு மூலம் அனுமன்தீர்த்தம் மற்றும் அம்மாபேட்டை உள்ளிட்ட பல கிராமங்களின் வழியாக செல்கின்றன. ஆகவே கரையோரங்களில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறும், சிறுவர்கள், இளைஞர்கள், திறந்து விடப்படும் வெள்ளநீர் செல்வதை வேடிக்கை பார்க்க செல்வதை அனுமதிக்க வேண்டாம் என பொது மக்களை கேட்டுக் கொள்ளப்படுகிறது என வருவாய் கோட்டாட்சியர் வில்சன் ராசசேகர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.