மதுரையில் விமன் இந்தியா மூவ்மென்ட் மதுரை மண்டல கூட்டம் மண்டலத் தலைவர் கதிஜா தலைமை யில் நடைபெற்றது.
இதில் மாநில பொதுசெயலாளர் பாயிஜா ஷபீக்கா சிறப்பு அழைப்பாள ராக கலந்து கொண்டார்.
இக்கூட்டத்தில் மதுரை மண்டலத்தை சார்ந்த மாவட்ட தலைவர்கள், பொதுச் செயலாளர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.
அக்டோபர் 2 ம் தேதி முதல் டிசம்பர் 2 ம் தேதி வரை “பெண்களின் பாதுகாப்பு; மனித சமூகத்தின் பொறுப்பு” என்ற தலைப்பில் அகில இந்திய பிரச்சாரம் சம்பந்தமாக தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன
இதில் “பெண்களின் பாதுகாப்பு; மனித சமூகத்தின் பொறுப்பு” என்ற போஸ்டர் வெளியிடப்பட்டது.
அக்டோபர் 2 ம் தேதி முதல் நவம்பர் 10 ம் தேதி வரை அனைத்து மாவட்டங் களிலும் போஸ்டர் பிரச்சாரம், நோட்டீஸ் விநியோகம் நடத்த வேண்டும் எனவும், நவம்பர் 19 ம் தேதி பெண்கள் வன்கொடுமை எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, பேரணி, மனித சங்கிலி, பொதுக்கூட்டம் போன்ற நிகழ்ச்சிகள் நடத்த வேண்டும் எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இக்கூட்டத்தில் மண்டலத்திற்கு உட்பட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.