ஒன்பதாம் ஆண்டு கம்பன் விழாவிற்கு மகளிர் அணி தலைவி மதுமொழி ஆனந்த் வரவேற்புரை ஆற்றினார் மற்றும் விழாவிற்கு கம்பன் கழகத் தலைவர் மதிப்புறு முனைவர் இ.ரவிந்தர் தலைமை தாங்கினார்

சிறப்பு விருந்தினர் பர்கூர் சட்டமன்ற உறுப்பினர் மாண்புமிகு. தே .மதியழகன் மற்றும் தவத்திரு பைரவ சாமிகள் குத்து விளக்கு ஏற்றி விழாவை தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார்கள்
சிறப்பு விருந்தினர் பண்ணாரி அம்மன் கிரைனைட் நிறுவன சந்திரசேகரன், கேசவா கிரைனைட் நிறுவனர் மகேஷ்,
தேசிய குற்றவியல் விசாரணை ஆணையம் தமிழ்நாடு கமிஷனர் ஹரி கிஷோர் பொதுச் செயலாளர் ரத்தினம் இனை ஆணையர் கிஷோர் குமார் மற்றும் ஜெகதேவி தண்ணீர் பாலம் துரை மாடன் பள்ளி தாளாளர் சத்தியமூர்த்தி அவர்கள் அனைவரும் சிறப்புரை ஆற்றினார்கள் கம்பனின் சமுதாய புரட்சி என்ற தலைப்பில் குடியாத்தம் கம்பன் கழக செயலாளர் தமிழ் திருமால் அவர்கள் சிறப்புரை ஆற்றினார் மற்றும் கிருஷ்ணகிரி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் மு. மகேந்திரன் அவை கம்பனும் அறிவியலும் என்ற தலைப்பில் எழிலுரை ஆற்றினார் மற்றும் கிருபானந்த வாரியார் சீடர் இரா உமா சங்கர் அவர்கள் ராமனும் குகனும் என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார் கிருஷ்ணகிரி பட்டிமன்ற நடுவர் ஜெ சி ஐ தேசிய பயிற்சியாளர் மாநில நல்லாசிரியர் அப்பா பாலமுருகன் கம்பனால் நாம் என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார்

வாணியம்பாடி இஸ்லாமிய கல்லூரி தமிழ் துறை தலைவர் ப சிவராஜி சிறப்புரை ஆற்றினார் மற்றும் அப்பர்சாமி திருநெல்வேலி யோகா சிவராமன் மற்றும் குறிஞ்சி இன்டர்நேஷனல் டிரஸ்ட் சசிகுமார், நுகர்வோர் விழிப்புணர்வு அலட்சியங்கள் தலைவர் ஜாய் மற்றும் கிருஷ்ணகிரி அரசு ஆடவர் கலை கல்லூரி வணிகவியல் துறை தலைவர் கிருஷ்ணன் மற்றும் இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி சேர்மன் செபாஸ்டின் மற்றும் வாணியம்பாடி இஸ்லாமிய கல்லூரி உதவி பேராசிரியர் அஸ்கர் திருப்பத்தூர் ஏலகிரி பாரதி தமிழ்ச்சங்கம் பொருளாளர் நல்லாசிரியர் சுந்தரம் ஆகியோர் வாழ்த்துரை கூறினர் விழாவிற்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்

இதில் சிறப்பாக பணி செய்த சேவையாளர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டது மற்றும் குழந்தைகளுக்கு பேச்சு போட்டி வைத்து மாவட்ட அளவில் முதல் பரிசு,இரண்டாம் பரிசு வாங்கி சிறப்பித்துள்ளோம். மற்றும் இல்லம் தேடி கல்வியில் சிறப்பாக சேவை செய்த இல்லம் தேடி கல்வி ஆசிரியர்களுக்கு தன்னார்வலர் 2024 என்ற பாராட்டு சான்றிதழ் வழங்கி கௌரவிக்கப்பட்டது. விழாவிற்கு தொகுப்பாளராக பொருளாளர் ஸ்ரீரங்கம் மற்றும் துணைத் தலைவர் அருள் தொகுத்து வழங்கினார்கள்.

விழா ஏற்பாடுகளை துணைத் தலைவர் விஜயகுமார்,பாலாஜி சிங்காரவேலன் இயக்குனர் முருகன் ,ஜி கே சீனிவாசன் கவி மன்ற தலைவர் சதீஷ் ஆகியோர் ஏற்பாடுகளை செய்தனர் விழா முடிவில் அவை தலைவர் அ பன்னீர்செல்வம் நன்றி உரை கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *