திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் வட்டம் மேல திருமதி குன்னம் சோழச்சேரி எனும் கிராமத்தில் அமர்ந்து அருள்பாலித்து வரும் அருள்மிகு பிரஹன்நாயகி அம்மன் சமேத அருள்மிகு விருத்தாஜலேஸ்வரர் மற்றும் ஸ்ரீ லெட்சுமி நாராயண பெருமாள் ஆலய அஷ்ட பந்தன மஹா கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது.
ஐப்பசி மாதம் ஒன்றாம் தேதி 18.10.24 வெள்ளிக்கிழமை விக்னேஸ்வர பூஜையுடன் துவங்கி நான்கு கால யாக பூஜைகள் நடைபெற்று நான்காம் காலம் யாக பூஜையின் மஹா பூர்ணாஹூதி நடைபெற்று மகாதீபாராதனை காண்பிக்கப்பட்டது.
அதன் பிறகு யாத்ராதானம் நடைபெற்று புனித நீர் அடங்கிய கடங்கள் புறப்பட்டு மேள தாளங்கள் முழங்க ஆலயத்தை வலம் வந்து விமான கோபுரத்தை அடைந்தது. அதன் பிறகு சரியாக 10 மணிக்கு விமான கோபுரத்திற்கு புனித நீர் ஊற்றி மகா கும்பாபிஷேகமும் அதனை தொடர்ந்து மூலஸ்தான தெய்வகளுக்கு புனித நீர் ஊற்றி மகா அபிஷேகம் நடைபெற்றது.அதன்பிறகு மஹா தீபாராதனையுடன் வெகு விமர்சையாக நடைபெற்றது .
விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்வாமி தரிசனம் செய்தனர். கலந்து கொண்ட அனைவருக்கும் அருட் பிரசாதங்களும் அன்னதான பிரசாதங்களும் வழங்கப்பட்டது. விழா ஏற்பாட்டினை மேல திருமதி குன்னம் கிராமவாசிகள் மற்றும் இந்து சமய அறநிலைத்துறை ஆய்வாளர் உதயகுமார் நிர்வாக அதிகாரி முத்துகிருஷ்ணன் மற்றும் சர்வ சாதகம் ரத்தினம் முத்துக்குமார் சிவாச்சாரியார் வேணுகோபால் ஐயர் ஆகியோருடன் விழாவானது விமர்சையாக நடைபெற்றது.
இக்கிராமம் சோழர்கள் ஆண்ட காலத்தில் ஆயுத கிடங்குகள் இங்கு இருந்ததால் இவ்வூருக்கு சோழச்சேரி என பெயர் பெற்று விளங்கியது எனவும் பிற்காலத்தில் திருமதிக்குன்னம் என் பெயர் மாறியதாகவும் அதே போல விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் ஆலயத்திற்கு பிறகு இங்கு விருத்தாஜலேஸ்வரர் இங்கு அமர்ந்து அருள் பாலிக்கிறார் எனவும் சிவாச்சாரியார் கூறினார்.