தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர் கமல் கிஷோரிடம் நாம் தமிழர் கட்சி கோரிக்கை மனு ;-
அக் :- 24
இது தொடர்பாக நாம் தமிழர் கட்சி தென்காசி மாவட்ட செயலாளர் அருண் சங்கர், மாவட்டத் தலைவர் பழக்கடை கணேசன் ஆகியோர் தலைமையில் மாநில கொள்கை பரப்பு செயலாளர்
அ. கோ தங்கவேல் தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் கமல் கிஷோரிடம் கொடுத்துள்ள மனுவில் கூறி இருப்பதாவது:-
தென்காசி மாவட்டத்தில் தொடர் கனிமவள கொள்ளையின் காரணமாக
கட்டுமான பொருட்களின்
விலையேற்றம்
மற்றும் கட்டுமான அடிப்படை பொருட்களின் தட்டுப்பாடு
குறிப்பாக.
மணல், எம்சான்ட் சல்லி போன்றவை எட்ட முடியாத விலையேற்றமும்,
தொடர்ச்சியாக கேரளாவுக்கு கடத்தப்படும்
எம் சாண்ட், சல்லி போன்ற கனிம வளங்கள்
தமிழகத்தின்
தேவைக்கு தட்டுப்பாடு நிலவி ஆங்காங்கே கட்டிட வேலைகள் தேங்கி நிற்கிற பேரவலம் நிகழ்கிறது. எனவும்.
மேலும் அண்டை மாநில கேரளாவிற்கு எந்தவித கட்டுப்பாடு இன்றி இரவு பகலாக
நடைபெறும் கனிமவள
சுரண்டலுக்கு மாவட்ட நிர்வாகம்
துணைபோய்க் கொண்டிருக்கிறது எனவும் .
இதை தடுப்பதற்கும்,
தமிழ்நாட்டின்
கட்டுமான தொழிலின்
தேவையை பூர்த்தி செய்யவும்
கட்டுமான பொருட்களின்
விலையேற்றத்தை கட்டுக்குள் கொண்டு வரவும், தங்கு தடையின்றி கட்டுமான பொருட்கள் கிடைத்திடவும் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் .
கேரள மாநிலத்தில் இருந்து
ஆற்று மணலும்,
மலையை உடைத்து சல்லிக்கற்களையும்
கேரளா அரசு அனுமதியுடன்.
தமிழகத்திற்கு வழங்க வேண்டுமெனவும் .
கனிம வளம் வழங்கும் விவகாரத்தில்.
( கேரளா மாநிலத்திற்கு தடை தொடரட்டும் )
தமிழகத்திற்கு
கேரள அரசு தடையை விலக்கிகொண்டு தமிழகத்திற்கு தேவையான
கனிம வளங்களை கேரளா அரசே விலை நிர்ணயித்து
தமிழகத்திற்கும்.
தென்காசி மாவட்டத்திற்கு
வழங்க வேண்டுமெனவும்.
தமிழகத்திலிருந்து தொடர்ச்சியாக கேரள மாநிலத்திற்கு கொண்டு செல்லப்படும் கனிம வளங்களை தடுக்க நடவடிக்கை எடுக்க விட்டால் நாம் தமிழர் கட்சியினர் மக்களைத் திரட்டி தமிழக கட்டுமான தேவை கருத்தில் கொண்டு கேரளாவிற்கு சென்று ஆற்று மணல் அள்ளும் போராட்டமும், சல்லி கற்கள் உடைத்து
எடுத்து வரும் போராட்டமும் அறிவிக்கப்
படுமெனவும். மனுவில் கூறியிருந்தார்.
அப்போது மாநில உழவர் பாசறை துணைத் தலைவர் விவசாயி பாலா, மாநில ஒருங்கிணைப் பாளர் மதிவாணன்
திருநெல்வேலி தெற்கு மாவட்ட செயலாளர் தினகரன், சங்கரன்கோவில் தொகுதி செயலாளர் பீர் ரகுமான், தென்காசி தொகுதி செயலாளர் வின்சென்ட், ஆலங்குளம் தொகுதி செயலாளர் ராமலிங்கம், தென்காசி தொகுதி தலைவர் அழகு பாண்டியன், துணைத் தலைவர் நைனா முகமது, தென்காசி தொகுதி கையூட்டு ஊழல் ஒழிப்பு பாசறை செயலாளர் சபரிநாதன் மற்றும் தென்காசி மாவட்ட நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.