விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை தாலுகா மேலன்மறைநாடு கிராமத்தை சேர்ந்த வீரர்
திரு பொன் பாண்டியன் அவர்கள் போர் ஒத்திகை பயிற்சியின் போது வீர மரணம் அடைந்தார்..
அவரின் இறுதி ஊர்வலத்தில் விருதை பட்டாளம் படை வீரர்கள் நலச்சங்கம் சார்பாக கலந்து கொண்டு அவர்கள் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறியும் அஞ்சலி செலுத்தியும் வரப்பட்டது ..விருதை பட்டாளம் படை வீரர்கள் சங்கத்தின் உறுப்பினர் யாராவது வீர மரணம் அடையும் பட்சத்தில் சங்கத்தில் உள்ள உறுப்பினர்கள் அனைத்து வீரர்களும் தங்களால் முடிந்த நிவாரண தொகையை வழங்கி மொத்தம் வரும் தொகையை வீர மரணம் அடைந்த வீரர்களுக்கு வழங்குவது வழக்கம். அதன்படி ஒரு மாத காலம் கொடுத்து வீரர்களிடம் நிவாரண வசூலிக்கப்பட்டது.
மொத்தம் 1 லட்சம் 2 ஆயிரம் ரூபாய் வீரர்கள் நிவாரண தொகை வசூலிக்கப்பட்டு அந்த தொகையை அவர்கள் குடும்பத்தினர் பெயரில் உள்ள தபால் நிலைய சேமிப்பு கணக்கில் போடப்பட்டது..
அதற்கான விருதை பட்டாளம் காசோலையை தலைவர் ராதாகிருஷ்ணன் மற்றும் துணை தலைவர் கோடீஸ்வரன் மற்றும் ஒருங்கிணைப்பாளர் ஜான் கென்னடி பொருளாளர் சங்கிலி பாண்டியன் மூத்த நிர்வாகிகள் பாண்டியராஜ் மற்றும் ஈஸ்வரன் மற்றும் அன்பழகன் மற்றும் விடுமுறை வந்த வீரர்கள் சென்று
வீரர் பொன் பாண்டியன் அவர்கள் குடும்பத்தினரிடம் நிவாரண தொகைக்கான காசோலையை வழங்கினர்.
அவர்கள் குடும்பத்தினர் உடன் என்றும் விருதை பட்டாளம் படை வீரர்கள் நலச்சங்கம் துணை நிற்கும் என தலைவர் அவர்கள் ஆறுதல் கூறினார்கள்..