தாராபுரம் செய்தியாளர் பிரபு
செல்:9715328420
தாராபுரம் அருகே தர்மபுரி மாவட்டத்தில் இருந்து பழனி கோவிலுக்கு பக்தர்கள் சென்ற 407 வேன் ஸ்டேரிங் துண்டித்ததால் கட்டுப்பாட்டை இழந்து தலை குப்புற கவிழ்ந்ததில் 12 பெண்கள் ஒரு ஆண் பட 13 பேர் காயம் அரசு மருத்துவமனைகள் சிகிச்சை
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே பக்தர்களை ஏற்றி சென்ற ஆம்னி வேன் கட்டுப்பாட்டை இழந்து தலைகுப்பிற கவிழ்ந்ததில் பழனி கோவிலுக்கு சென்ற பக்தர்கள் 13 பேர் படுகாயம் அடைந்தனர்
தர்மபுரி மாவட்டம் கடத்தூர் பகுதியைச் சேர்ந்த ஒரே குடும்பங்களைச் சார்ந்த உறவினர்கள் 20 பேர் 407 வேன் ஒன்றில் திண்டுக்கல் மாவட்டம் பழனி கோவிலுக்கு சென்று கொண்டிருந்தனர் .
வேன் தாராபுரத்தை அடுத்த தாசநாயக்கன்பட்டி என்ற இடம் அருகே வந்தபோது வேனின் ஸ்டேரிங் திடீரென துண்டானதில் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்தவேன் சாலையில் தலைக்குப்பிற கவிழ்ந்து நடைபெற்ற விபத்தில் 1ஆண் 12 பெண்கள் உட்பட 13 பேர் படுகாயம் அடைந்தனர்.
காயமடைந்தவர்கள் விபரம் வருமாறு:-
தர்மபுரி மாவட்டம் கடத்தூரைச் சார்ந்த பவுன்ராஜ் 42 தனியார் நிறுவன தொழிலாளி,
ராமசுந்தரம் மனைவி மோனாலிசா 32, மூர்த்தி என்பவர் மனைவி நாகலட்சுமி 33 சங்கர் மனைவி சித்திரகலா 45, பழனிச்சாமி மனைவி மகேஸ்வரி 51, அபிராமி 27 ஆக மொத்தம் 13 படுகாயம் அடைந்து தாராபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர், விபத்து குறித்து அலங்கியம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.