தேனி மாவட்டம் தேனி அருகே உள்ள பழனிசெட்டிபட்டி முதல் நிலை பேரூராட்சியில் பழனி செட்டிபட்டி பேரூராட்சியின் கட்டணமில்லா ஆர்.ஓ. குடிநீர் விநியோக நிலையத்தினை தேனி வடக்கு மாவட்ட திமுக செயலாளர் தேனி எம்.பி.திறந்து வைத்தார்
பொதுவாக ஒவ்வொரு பொதுமக்களுக்கும் முக்கிய தேவை குடிநீர் குடிநீர் சுத்தமாக பருகினாலே எந்த ஒரு நோய் நொடியின்றி இந்த மண்ணில் வாழ முடியும் பொதுமக்கள் நோய் நொடி இல்லாமல் ஆரோக்கியமாக வாழ வேண்டும் என்ற நல்ல எண்ணத்துடன் பழனிசெட்டிபட்டி பேரூராட்சி மன்ற தலைவர் வழக்கறிஞர் வி பி ஏ மிதுன் சக்கரவர்த்தி பேரூராட்சி செயல் அலுவலர் இரா.சுதா ஆகியோர் கடும் முயற்சி எடுத்து பேரூராட்சி பொது நிதியின் கீழ் ரூபாய் 8.2 லட்சம் மதிப்பீட்டில் பேரூராட்சி பகுதிக்கு உட்பட்ட வார்டு எண் 5 வெற்றி காளியம்மன் கோவில் அருகில் மற்றும் வார்டு 11 ஆவது வார்டு துணை சுகாதார நிலையம் அருகில் 1000 லிட்டர் உற்பத்தி திறன் கொண்ட கட்டணமில்லா சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் ஆர் ஓ வாட்டர் விநியோக நிலையம் கட்டப்பட்டு திறப்பு விழாவிற்கு தயார் நிலையில் இருந்தது இதனை தேனி வடக்கு மாவட்ட திமுக செயலாளர் தேனி பாராளுமன்ற உறுப்பினர் தங்க தமிழ்ச்செல்வன் எம்பி பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார் இந்த நிகழ்ச்சியில் தேனி மாவட்ட பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் வில்லியம் ஜேசுதாஸ் பேரூராட்சி மன்ற தலைவர் வி பி ஏ மிதுன் சக்கரவர்த்தி பேரூராட்சி செயல் அலுவலர் இரா. சுதா பேரூராட்சி மன்ற துணைத் தலைவர் மணிமாறன் பேரூராட்சிகளின் உதவி பொறியாளர் த.
திவ்யா பேரூர் திமுக செயலாளர் செல்வராஜ் இளநிலை
உதவியாளர் ஜெயக்குமார் அலுவலக உதவியாளர் முரளி உள்ளிட்ட பேரூராட்சி மன்ற கவுன்சிலர்கள் பேரூராட்சி அலுவலர்கள் பணியாளர்கள் கலந்து கொண்டனர்