தாராபுரம் செய்தியாளர் பிரபு
செல்:9715328420
அரசு மேல்நிலைப் பள்ளியில் 6 பள்ளி மாணவ மாணவிகளுக்கு சுமார் 15 லட்சம் மதிப்பீட்டில் 339 மிதிவண்டிகளை அமைச்சர் கயல்விழி வழங்கினார்.
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் 5 சாலை சந்திப்பு பகுதியில் அமைந்துள்ள அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் தாராபுரம் சுற்றுவட்டார பகுதியில் உள்ள 6 பள்ளிகளில் பயிலும் மாணவ மாணவிகள் சுமார் 339 நபர்களுக்கு 15 லட்சம் மதிப்பீட்டில் மிதிவண்டிகள் வழங்கப்பட்டது.
இதில் ஆர்டிஓ பெலிக்ஸ் ராஜா தலைமையில் மிதிவண்டிகள் வழங்கும் விழா நடைபெற்றது இந்நிகழ்ச்சிக்கு தாராபுரம் நகர மன்ற தலைவர் பாப்பு கண்ணன் மற்றும் திமுக நகர கழக செயலாளர் முருகானந்தம் ஆகியோர் முன்னிலை வகித்தார்.
மிதிவண்டிகள் வழங்கும் விழாவில் மனிதவள மேலாண்மை துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் கலந்து கொண்டு 15 லட்சம் மதிப்பீட்டில் 11 வகுப்பு படிக்கும் மாணவ மாணவிகளுக்கு மிதிவண்டிகளை வழங்கி சிறப்பித்தார்.
நிகழ்ச்சியில் மாவட்ட வழக்கறிஞர் அணி அமைப்பாளர் செல்வராஜ், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பிரபாவதி, மருத்துவர் அணி துணை அமைப்பாளர் இந்திராணி, தகவல் தொழில்நுட்ப அணி துணை அமைப்பாளர் ஆனந்தி தொடக்கக் கல்வி அலுவலர் அருள் ஜோதி, அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சங்கீதா மற்றும் தாராபுரம் நகர்மன்ற உறுப்பினர்கள் திமுக நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.