நிதித்துறைக்கு மதுரை மாவட்ட தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி
செயலாளர் பெ. சீனிவாசன் கோரிக்கை….
மத்திய அரசுக்கு இணையான ஊதியத்தை இடைநிலை ஆசிரியர்கள் இழந்துள்ள நிலையில், ஊதிய கட்டில் ரூ.75900 நிலையை அடைந்த பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு, 2026-ஜனவரி முதல் ஆண்டு ஊதிய உயர்வும் இல்லை என்ற நிலை ஏற்பட்டுள்ளது. சிக்கலை களையுமா நிதித்துறை?.
1.6.1988 முதல் 31.12.2005 வரை இடைநிலை ஆசிரியர்கள் மத்திய அரசுக்கு இணையாக பெற்று வந்த ஊதியத்தை, கடந்த 1.1.2006 முதல் நாளது தேதியில் 19 ஆண்டுகளாக மத்திய அரசுக்கு இணையான ஊதியத்தை இடைநிலை ஆசிரியர்கள் இழந்து நிற்கும் நிலையில், கடந்த 1.1.1999 முதல் பல்வேறு காலகட்டங்களில் இடைநிலை ஆசிரியராகப் பணி நியமனம் பெற்று நாளது தேதியிலும் இடைநிலை ஆசிரியராகவே ஊதியக்கட்டு ரூ 20,600-75,900-ல் தர ஊதியம் 2800-ல் பணியில் இருக்கக்கூடிய இடைநிலை ஆசிரியர்களில் ஊதியக்கட்டில் கடைசி நிலையான ரூ75,900ஐ அடைந்த இடைநிலை ஆசிரியர்களுக்கு, 2026-ஜனவரி முதல் ஆண்டு ஊதிய உயர்வு இல்லை என்ற ஏற்பட்டு இடைநிலை ஆசிரியர்களின் தலையில் இடி மேல் இடி விழுவது போன்ற நிலை ஏற்பட்டுள்ளது.
இந்தச் சிக்கலைக் களைய ஆண்டு ஊதிய உயர்வை அனுமதிக்கும் அரசாணை எண்-90-க்கு நிதித்துறை போர்க்கால அடிப்படையில் செயல்பட்டு 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடைநிலை ஆசிரியர்கள் பாதிப்புக்குள்ளாகாமல், 2026 ஜனவரி முதல் ஒவ்வொரு ஆண்டிற்கும் ஆண்டு ஊதிய உயர்வு கிடைக்கும் வகையில் ஆண்டு ஊதிய உயர்வை அனுமதிக்கும் அரசாணையில் உரிய திருத்தம் செய்து புதிய அரசாணையை போர்க்கால அடிப்படையில் நிதித்துறை உடனடியாக வெளியிட வேண்டும் என
மதுரை மாவட்ட தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி செயலாளர்
பெ. சீனிவாசன் கோரிக்கை விடுத்துள்ளார்.