திருவாரூர் மாவட்டம் அம்மையப்பன் புது தெருவை சேர்த்த முத்து தேவி தம்பதியினரின் மகன் நவீன் வயது 7 இவர் அப்பகுதியில் உள்ள அரசு பள்ளியில் ஒன்றாம் வகுப்பு படித்து வருகிறார். இவர் வீட்டில் கோழிகள் வளர்த்து வருகின்றனர்.

இந்த நிலையில் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு இரவு நேரத்தில் உறங்கிக் கொண்டிருந்த பொழுது கோழியை பிடிப்பதற்காக கீரிப்பிள்ளை வந்துள்ளது அப்போது உறங்கிக் கொண்டிருந்த சிறுவனின் கையை கடித்துள்ளது.

கடித்த உடன் சிறுவன் கத்தியுள்ளார் அப்போது அப்பகுதியில் உள்ள மருத்துவமனையில் ஊசி போடப்பட்டு சிகிச்சை பெறாமல் இருந்துள்ளார்.
இந்த நிலையில் கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு அந்த சிறுவனுக்கு காய்ச்சல் அதிகமாகி இருந்துள்ளது உடனடியாக பெற்றோர்கள் திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரியில் மருத்துவமனைக்கு அனுமதித்ததுள்ளனர்.

தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிறுவன் சிகிச்சை பெற்று வந்துள்ளார் நேற்று நள்ளிரவு காய்ச்சல் அதிகமாகி கீறிபிள்ளை போல் செய்கை செய்து இருந்து திடீரென இறந்துள்ளார்.

உடனடியாக மருத்துவர்கள் சிறுவனின் உடலை பெற்றோரிடம் ஒப்படைக்காமல் சுகாதார ஆய்வாளர் முன்னிலையில் நல்லடக்கம் செய்தனர்.

கீரிப்பிள்ளை கடித்து அலட்சியமாக சிகிச்சை எடுக்காமல் இருந்த நிலையில் மூன்று மாதம் கழித்து சிறுவன் கீரிப்பிள்ளை போல் செய்கை செய்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *