திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தாலுகா பீஸ் அலுவலகத்தில் தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கம் சார்பாக தொடர் காத்திருப்பு போராட்டம் நடத்தி வருகிறார்கள்
தாராபுரத்தில் கிராம நிர்வாக அலுவலர்கள் திருப்பூர் மாவட்ட தலைவர் காளிமுத்து தலைமையில் செயலாளர் பழனிச்சாமி முன்னிலையில் 50 கிராம நிர்வாக அலுவலர்கள் கிராம நிர்வாகத்தின் முதுகெலும்பு எங்கள் பணி கிராம நிர்வாக அலுவலகதில் கழிப்பறை குடிநீர் இணைய வசதியுடன் கூடிய நவீன மாயமாக்க செய்யப்பட்ட கிராம நிர்வாக அலுவலகம் அமைத்து தரக் கோரியும்
கிராம நிர்வாக அலுவலர்களின் டிஎன்பிஎஸ்சி நேரடி நியமன முறையில் கல்வித் தகுதியை அடிப்படையில் பட்டப்படிப்பு என மாற்றியமைக்க வேண்டும்
பத்தாண்டு பணி முடித்தவர்களுக்கு தேர்வு நிலை கிராம நிர்வாக அலுவலர் எனவும் 20 ஆண்டு பணி முடித்த கிராம நிர்வாக அலுவலர்களுக்கு சிறப்பு நிலை கிராம நிர்வாக அலுவலர்கள் எனவும் பெயர் மாற்றம் செய்ய அரசாணை வெளியிட வேண்டும்
பதவி உயர்வில் கிராம நிர்வாக அலுவலர் இளநிலை உதவியாளர் விகிதாச்சாரகளுக்கு ஏற்ப முப்பது சதவீத என்பதிலிருந்து 50 சதவீதம் மாற்றம் செய்து கிராம நிர்வாக அலுவலரின் பதவி உயர்வுக்கான காலவரம்பை ஆறு ஆண்டுகளில் இருந்து மூன்று ஆண்டுகளாக குறைத்து அரசாணை வெளியிட வேண்டும்
தேர்வு நிலை கிராம நிர்வாக அலுவலர்களுக்கு முதுநிலை வருவாய் ஆய்வாளர் நிலையில் ஊதியமும் சிறப்பு நிலை கிராம நிர்வாக அலுவலர்களின் துணை வட்டாட்சியர் நிலையில் ஊதியமும் வழங்க வேண்டும்
டி எஸ் எல் ஆர் பட்டா மாறுதலில் கிராம நிர்வாக அலுவலர்களின் பரிந்துரை பெற வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை முதன்மைச் செயலாளர் உத்தரவு பிறப்பிக்கப்பட்டும் இது நாள் வரை நடைமுறைப்படுத்தாமல் இருப்பதை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்று கோரிக்கைகளை முன்வைத்து தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்