இன்று கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் நகர அம்மா பேரவை, மற்றும் நகர எம்.ஜி.ஆர் மன்றம் சார்பில் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் அவர்களின்109ம் ஆண்டு பிறந்தநாள் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் 79 ஆம் ஆண்டு பிறந்தநாள், முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் 72 ஆம் ஆண்டு பிறந்த நாள் ஆகிய விழாக்களை ஒருங்கிணைத்து முப்பெரும் விழாவாக நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நகர அம்மா பேரவை பொதுச் செயலாளர் கே. வெள்ளிங்கிரி தலைமையில் நடைபெற்றது.
நகர எம்ஜிஆர் மன்ற செயலாளர் எல். எஸ். புரம் ரவி நகர கழக துணை செயலாளர் எம். என். பாலன் ஆகியோர் வரவேற்புரை ஆற்றினர். மாவட்ட அம்மா பேரவை செயலாளர் நாசர், மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற செயலாளர் வீரபாண்டி எஸ். விஜயன் மேட்டுப்பாளையம் நகர கழக செயலாளர் வான்மதி சேட் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் கோவை வடக்கு மாவட்ட செயலாளர் பி. ஆர். ஜி. அருண்குமார், மேட்டுப்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் ஏ.கே. செல்வராஜ் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டு ஆயிரக்கணக்கானோருக்கு புடவை, சில்வர் பாத்திரங்கள், ஹாட் பாக்ஸ் ஆகியவற்றை வழங்கினர்.