கிருட்டிணகிரி பகுதியானது அவ்வப்போது கடும் வறட்சியால் பாதிக்கப்படும் பகுதியாக இருந்தது. தென்பெண்ணை ஆற்றின் கரையை ஒட்டியுள்ள விவசாயிகள் மட்டுமே ஆற்று நீரை ஏற்றம் முலம் எடுத்து விவசாயம் செய்தனர்.

ஆனால் மற்ற விவசாயிகள் வறட்சியால் பாதிக்கப்பட்டவர்களாக இருந்தனர், இதனால் அப்போதைய காவேரிப்பட்டணம் சட்டமன்ற உறுப்பினரான நாகராஜ மணியகாரர் தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே அணைகட்ட தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்ததையடுத்து
காமராசர் முதலமைச்சராக இருக்கும் போது தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே 1957ம் ஆண்டு கே.ஆர்.பி. அணை கட்டி முடிக்கப்பட்டு அணையில் இருந்து முதல் போக சாகுபடிக்காக அணையில் இருந்து காமராஜர் தண்ணீரை திறந்து விட்டார்


இதன் மூலம் கிருஷ்ணகிரி, தர்மபுரி, வேலூர், விழுப்புரம் திருவண்ணாமலை ஆகிய ஐந்து மாவட்டங்கள் மக்களின் தாகத்தினை தீர்ப்பதோடு மக்களின் பஞ்சத்தினையும்
போக்கியது,அணையில் இருந்து தண்ணீர்
திறக்கப்பட்டு 68 வது ஆண்டை முன்னிட்டு தமிழக
காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை மற்றும் கிருஷ்ணகிரி காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் கோபிநாத் ஆகியோரின் வழிகாட்டுதலின் பெயரில் கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் சார்பில் கே.ஆர் .பி அணையில்
68 ஆம் ஆண்டு துவக்க விழா நடைபெற்றது கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் முன்னாள் தலைவரும் மாநில பொதுக்குழு உறுப்பினருமான எல்.சுப்பிரமணியன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவிற்கு முன்னால் அகில இந்திய காங்கிரஸ் உறுப்பினர் முத்துக்குமார்,நகர காங்கிரஸ் தலைவர்
தக்காளி தவமணி,மாவட்ட தொழிலாளர் காங்கிரஸ்
மாவட்ட தலைவர் ராமச்சந்திரன், தொகுதி பொறுப்பாளர் திம்மப்பா சரவணன் ஆகியோர் முன்னிலை வைத்தனர் மேலும் இந்த விழாவின் போது கிருஷ்ணகிரி உள்ளிட்ட ஐந்து மாவட்ட மக்களுக்கு நீர் ஆதரமாக உள்ள கே ஆர் பி அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட்டு தாகம் மற்றும் பசி பட்டினி போக்கிய கர்மவீரர் காமராஜரின் திரு உருவப் படத்திற்கு முன்னாள் காங்கிரஸ் தலைவர் எல்.சுப்பிரமணியன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி அணையின் மதகு பகுதியில்
மலர் தூவி வணங்கினார்

தொடர்ந்து செய்தியாளர் சந்தித்த முன்னால் மாவட்டத் தலைவர்
எல்.சுப்பிரமணியண் கிருஷ்ணகிரி கே.ஆர்.பி ஆற்றின் படுகையில் குளிப்பவர்கள் உடைகள் மாற்றுவதற்கும், கழிப்பறை சொல்வதற்கும் ஏதுவாக நவீன முறையில் உடைமாற்று அறைகள் அமைக்க வேண்டும், அணையின் வலது மற்றும் இடது புற சொல்லும் கால்வாய்களுக்கு சட்டர்கள் அமைத்து கால்வாய்களை முறையாக தூர்வாரி தங்கு தடை இன்றி விவசாயத்திற்கு தண்ணீர் செல்வதற்கு தகுந்த வசதிகள் ஏற்படுத்தி தர வேண்டும், அரசுக்கு சொந்தமான கட்டிடங்கள் பழுதான நிலையில் உள்ளது இதனை உரிய பராமரிப்பு செய்து பயன்பாட்டை கொண்டு
வர வேண்டும்,எண்ணேக்கொள் புதூர் உபரி நீர் செல்லும் கால்வாய் பணியை தூரிதப்படுத்தி மக்கள் பயன்பாட்டிற்காக கொண்டு வர வேண்டும்,,வளம் மிக்க மாவட்டமாக உருவாக்கிய பெருந்தலைவருக்கு ஆண்டு தோறும் நவம்பர் 10 தேதி அணையில் அரசு சார்பில் விழா எடுத்து அவரின்
முழுஉருவ வெங்கலச்சிலை அமைக்க உரிய அனுமதி வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்,
மேலும் இந்த விழாவில் முன்னால் நகர தலைவர் வின்சென்ட் வட்டாரத் தலைவர்கள், வெல்வராஜ், மூர்த்தி, தனஞ்செயன், மூர்த்தி, வேடியப்பன்,சிறுபான்மைதுறை முஸ்தப்பா, ரமேஷ், மாவட்ட துணைத் தலைவர் விவேகானந்தன், மற்றும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தநாகராஜ், ராதாகிருஷ்ணன், ஜெயவேல், துரைசாமி , தேவேந்திரன்,ராஜேந்திரன், அக்பர், முனிராஜ் உள்ளிட்ட பலர் ஏராளமானவர்கள் இவ்விழாவில் கலந்துக்
கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *