இலவச பொது மருத்துவ முகாமி னை சிவபத்மநாதன், பழனி நாடார் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தனர் ;-
தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தில் நடைபெற்ற இலவச பொது மருத்துவ முகாமினை முன்னாள் மாவட்ட திமுக செயலாளர் வக்கீல் சிவபத்மநாதன், பழனிநாடார் எம்.எல்.ஏ. ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
ஆலங்குளம் ஆசிரியர்கள் எம்.மனுவேல்ராஜ், எம்.அருணோதயம் நினைவு அறக்கட்டளை சார்பில் அவர்களது 31- வது நினைவு தினத்தையொட்டி மாபெரும் இலவச பொது மருத்துவ முகாம் நடைபெற்றது. ஆலங்குளம் றி.டி.றி.ஏ. நடுநிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்ற இம் முகாமிற்கு வக்கீல் ராஜா தலைமை வகித்தார்.
மாவட்ட கவுன்சிலர் பேராசிரியர் சாக்ரடீஸ், ஊராட்சி மன்ற தலைவர் ஜெகன், வட்டார காங்கிரஸ் தலைவர் ரூபன் தேவதாஸ், முன்னாள் பேரூராட்சி துணைத்தலைவர் தங்கசெல்வம், பேரூராட்சி கவுன்சிலர் கணேசன் முன்னிலை வகித்தனர்.
வட சென்னை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவரும், சென்னை மாநகராட்சி மாமன்ற காங்கிரஸ் தலைவருமான சாமுவேல் திரவியம் வரவேற்றார்.
முன்னாள் தென்காசி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் வக்கீல் பொ.சிவபத்மநாதன், மாவட்ட காங்கிரஸ் தலைவர் பழனிநாடார் எம்.எல்.ஏ. ஆகியோர் கலந்து கொண்டு முகாமினை தொடங்கி வைத்து பேசினர்கள்.