தென்காசி மாவட்டம் ஆலங்குளம் வட்டத்தில்
தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பாக வட்ட கிளை மாநாடு நடைபெற்றது
இன் நிகழ்வில் ஆலங்குளம் வட்டாட்சியர் அலுவலகத்தில் பணிபுரியும் தலைமையிடத்து துணை வட்டாட்சியர் ஆறுமுகம் தலைமை தாங்கினார்,
மாவட்ட தலைவர் பிகே மாடசாமி துவக்கவுரையாற்றினார்,
வேலை வாய்ப்பு துறைஅலுவலர் சங்கத்தின் மாநில பொதுசெயலாளர், மற்றும் அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்ட துணைத் தலைவருமான மார்த்தாண்ட பூபதி முன்னிலை வகித்தார்,
மக்கள் நல பணியாளர் சங்கத்தின் மாநில பொது செயலாளர் புதியவன், வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தின் மாவட்ட பொருளாளர் இசக்கிதுரை, .மாரிச்செல்வம் ஆகியோர். வாழ்த்துரை வழங்கினார்,
வட்ட கிளைக்கு புதிய நிர்வாகிகள் தேர்வு நடைபெற்றது, பல்வேறு கோரிக்கைகள் தீர்மானமாக இயற்றப்பட்டது,
இதில் தமிழக அரசு பழைய ஓய்வூதி யத்தை உடனடியாக வழங்க வேண்டும், நிறுத்தப்பட்ட சரண்டர், 21 மாத நிலுவை தொகை வழங்கவேண்டும்,காலி பணியிடத்தை நிரப்ப வேண்டும் போன்ற பல்வேறு தீர்மானங்கள் இயற்றப்பட்டது இறுதியாக வருவாய்த்துறை அலுவலர் சங்கம் சார்பாக வருகின்ற 26.11.2024 முதல் ஐந்து அம்ச கோரிக்கை தொடர்பாக நடைபெறும் பணிபுறக்கணிப்பு மற்றும் தொடர் காத்திருப்பு போராட்டம் எழுர்ச்சியாக நடைபெறுவதை முன்னிட்டு வருவாய்த்துறை தோழர்கள் முழுமையாக 100% கலந்து கொள்ள வேண்டும் என வலியுறுத்தி மாவட்ட செயலாளார். சீனிபாண்டி எழுர்ச்சியுடன் பிரச்சார உறையாற்றினர் .
இறுதியாக புதிதாக தேர்வு பெற்ற வட்ட கிளை துணைத் தலைவர் திருப்பதி அவர்கள் நன்றி கூறினார்.