தருமபுரி
57-வது தேசிய நூலக வாரவிழா – 2024
தருமபுரி மாவட்ட மைய நூலகம் மற்றும் வாசகர் வட்டம் இணைந்து நடத்தும் 57-வது தேசிய நூலக வாரவிழா 17.11.2024 முற்பகல் 11.00 மணியளவில் மாவட்ட மைய நூலகத்தில் தமித்தாய் வாழ்த்துடன் துவங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சி திருமதி.அர.கோகிலவாணி மாவட்ட நூலக அலுவலர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
இதில் பள்ளி மாணவர்கள், போட்டித் தேர்வு மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சியின் தொடக்கமாக முதல் நிலை நூலகர் திரு.இரா.மாதேஸ்வரன் அவர்கள் வரவேற்புரையாற்றினார். இவ்விழாவினை இரண்டாம் நிலை நூலகர் திரு.ந.ஆ.சுப்ரமணி அவர்கள் தொகுத்து வழங்கினார்.
இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக வருகை புரிந்த தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் திரு.எஸ்.பி.வெங்கடேஷ்வரன் அவர்கள் நூல் கண்காட்சியை திறந்து வைத்துத்தார்.
மேலும் நகராட்சி நடுநிலைப்பள்ளியில் நடைபெற்ற கட்டுரைப் போட்டி, கவிதைப் போட்டி, பேச்சுப் போட்டியில் பங்கேற்று வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்களை வழங்கி மாணவர்களுக்கு நூலகத்தின் அவசியத்தைப் பற்றியும் ஒரு நூலகம் திறப்பது என்பது 100 சிறைச்சாலைகளை மூடுவதற்குச் சமம் என்று நூலகத்தின் சிறப்பை மாணவர்களுக்கு எடுத்துரைத்து சிறப்புரையாற்றினார்.
சிறப்புரையைத் தொடர்ந்து மாவட்ட நூலக அலுவலர் திருமதி.அர.கோகிலவாணி அவர்கள், நூலகத்திற்கு மாணவர்கள் வருகை அதிகரிக்கவும், நூலகத்தில் பொதுமக்களிடையே வாசிப்பு பழக்கத்தை மேம்படுத்தவும், நூலகத்தை எவ்வாறு பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்பதற்காக இதுபோன்று நூலக வரா விழாவினை நடத்தி அவர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி வருவதாக கூறி தலைமையுரையாற்றினார்.
இந்நிகழ்ச்சியைத் தொடர்ந்து மாவட்ட கல்வி அலுவலர்(ப.நி), வாசகர் வட்ட துணைத்தலைவர் திரு.மு.பொன்முடி அவர்கள், திரு.மா.பழனி தலைமை ஆசிரியர் வாசகர் வட்டம் அவர்கள், திரு.க.சி.தமிழ்தாசன் தலைமை ஆசிரியர், கம்பன் கழகம், வாசகர் வட்ட உறுப்பினர் அவர்கள், திரு.சி.இராஜேந்திரன் மாவட்ட நூலக அலுவலர்(ப.நி) அவர்கள் மாணவர்கள் கற்க கசடறக் கற்பவை கற்றபின் நிற்க அதற்குத் தக என்ற திருவள்ளுவரின் குறளுக்கேற்றவாறு கல்வியை எவ்வாறு கற்க வேண்டும் என்பதையும் நூல்களை மேலோட்டமாக கற்காமல் ஆழ்ந்து கற்று அறிய வேண்டும் என்று கல்வி கற்றலின் சிறப்பை எடுத்துரைத்து வாழ்த்துரை வழங்கினார்கள். விழாவின் நிறைவாக மூன்றாம் நிலை நூலகர் திருமதி.கி.அமுதா அவர்கள் நன்றியுரை வழங்கினார். மேலும் தேசிய கீதம் பாடப்பட்டு விழாவனது இனிதே நிறைவு பெற்றது.