விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் ஊர்காவல்படை அலுவலகத்தில் டிஜிபி,
வன்னிய பெருமாள் ஆய்வு மேற்கொள்ள வந்திருந்தார் அவரை ஊர்காவல்படை மதுரை மண்டல துணை தளபதி ராம்குமார் ராஜா
வட்டார தளபதி அழகர்ராஜா வரவேற்றனர் பின்னர் டிஜிபி,அலுவலக கோப்புகளை ஆய்வு செய்தபின் அலுவலக வளாகத்தில் மரக்கன்று நட்டார்
விருதுநகர் மாவட்ட எஸ்பி கண்ணன் உடனிருந்தார் இருவரும் ஊர்காவல்படை அலுவலர்களிடம் பேசியபோது உங்களுக்கு அரசிடம் பேசி காவலர்களுக்கான குடிமை பொருட்கள் வழங்கும் கேன்டினில் பொருட்கள் வாங்க அனுமதி அட்டை மற்றும் மருத்துவ வசதிக்கான அட்டையும் பெற்றுத்தரப்பட்டுள்ளது

இன்னும் நிறைய பலன்கள் பெற்றுத்தர நடவடிக்கை மேற்கொள்ளப்படும் ஆகவே அனைவரும் பொறுப்பாக செயல்படுங்கள் என்றார் இதற்காக அனைவரும் கரகோசம் செய்து நன்றிகளை தெரிவித்துக்கொண்டனர்,

டிஜிபி அங்கிருந்து புறப்பட்டு சென்றபின் மாவட்ட எஸ்பி கண்ணன் ஊர்காவல் படை அலுவலர் மற்றும் ஆளினர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தி பேசினார் பின்னர் செய்தியாளர்களிடம் பேசும்போது காவல்துறைக்கு மிகவும் உதவியாக இருப்பது ஊர்காவல்படை மற்றும் செய்தியாளர்கள்தான் மககள் சேவைக்காகவும் சட்டம் ஒழுங்கை காப்பதிலும் சட்டவிரோத செயல்களை தடுப்பதிலும் இனைந்து செயல்படுவோம் பொதுமக்களுக்கும் காவல்துறைக்கும் இடையே பாலமாக நேர்வழியில் தங்களது செயல்பாடுகள் இருக்கவேண்டும் மக்கள் நலன் கருதி எந்த விசயமானாலும் எந்த நேரத்தில் என்னை தயங்காமல் தொடர்பு கொள்ளலாம் என்றார் சார்பு ஆய்வாளர் தேவதாஸ்
து.வ.தளபதி அருட்செல்வி
வெங்கடபெருமாள் மற்றும் ஊ.கா.படை அலுவலர்கள் அனைவரும் கலந்துகொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *