கும்பகோணம் செய்தியாளர்
ஆர்.தீனதயாளன்
கும்பகோணம் அருகே கபிஸ்தலத்தில் போதைப் பொருள் குற்றவாளிள் 2 -பேர் மீது குண்டர் சட்டம்..
.
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே கபிஸ்தலம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் சட்டத்திற்கு புறம்பாக போதைப் பொருட்கள் விற்பதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் சோதனை மேற்கொண்டதில் போதைப் பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்த பரமேஸ்வரன் மற்றும் ஜெயக்குமார் ஆகியோரை கைது செய்து அவர்களிடமிருந்து 6 கிலோ 360கிராம் கஞ்சா போதைப் பொருளை பறிமுதல் செய்து கபிஸ்தலம் காவல் ஆய்வாளர் மகாலட்சுமி வழக்குப்பதிவு செய்யப்பட்டு வழக்கில் தொடர்புடையவர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை வேண்டித் துணைக் காவல் கண்காணிப்பாளர் முருகவேலு வேண்டுகோளின் படி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆஷிஷ் ராவத் பரிந்துரையின்படி தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் உத்தரவின்படி குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் தேனி மாவட்டத்தைச் சேர்ந்த ஜெயக்குமார், பரமேஸ்வரன் ஆகிய இருவரையும் சிறையில் அடைத்தனர்.