போச்சம்பள்ளி கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தங்கதுரை பர்கூர் உட்கோட்டம், போச்சம்பள்ளி காவல் நிலையத்திற்கு நேரில் சென்று வருடாந்திர ஆய்வு மேற்கொண்டார்கள். காவல் நிலையத்தில் பராமரிக்கப்படும் பதிவேடுகளை ஆய்வு செய்தும், நிலையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள வழக்குகளின் தற்போதைய நிலைகளையும் ஆய்வு செய்து அதிகாரிகள் மற்றும் காவலர்களுக்கு அறிவுரைகள் வழங்கினார்.
இதில் அதிகாரிகளிடையே எஸ்.பி. பேசுகையில் பொதுமக்களை அச்சுறுத்தி, சட்ட விரோத செயல்களில் ஈடுபடும் நபர்களை கண்காணித்து அவர்கள் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை மேற்கொள்ளவும், பொதுமக்கள் அளிக்கும் புகார் மனுக்கள் மீது காலதாமதமின்றி விரைந்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் போச்சம்பள்ளி சிப்காட் பகுதிகளில் நாள்தோறும் இருபது ஆயிரத்திற்கும் மேற்ப்பட்ட தொழிலாளர்கள் தனியார் நிறுவங்களில் வேலையின் காரணமாக வந்து செல்கின்றனர்.
அஹேபோல் ச்ப்காட் பகுதிகளில் நடைபெறும் கட்டுமான பணிகளுக்கு வெளி மாநிலங்கள் மற்றும் வெளுயுர்களில் இருந்து தங்கியுள்ளவர்கள் விபரங்களை சேகரித்து வைக்கவும் இரவு ரோந்துகளை அதிகரிந்து கண்காணிக்கவும், வங்கி, ஏடிஎம் மிஷின், கடைகள் உள்ளிட்டவைகளை சிசிடிவி கேமராக்கள் பொறுத்த அறிவுறுத்தவும், மேலும் சாலை மற்றும் சந்தேக்கிக்கும் வகையிலான இடங்களில் சிசிடிவி கேமரா பொருத்தி கண்காணிக்கவும் அறிவுறுத்தினார்.
இதில் பயிற்சி காவல் துணை கண்காணிப்பாளர் பிரதீப், காவல் ஆய்வாளர் நாகலட்சுமி, சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் சரவணன், ரவி, உளவுத்துறை சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் சுதாகர், உளவுத்துறை காவலர் ஆனந்ராஜ் மற்றும் காவலர்கள் இருந்தனர்