கும்பகோணம் செய்தியாளர்
ஆர். தீனதயாளன்
கும்பகோணத்தில் ஸ்ரீ ஐயப்ப சுவாமியின் 15-ஆம் ஆண்டு ஐயப்பன் பவனி விழா……
திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம்..
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் உள்ள ஸ்ரீநகர் காலனி ஸ்ரீ வலம்புரி விநாயகர் கோவிலில் உள்ள இஷ்ட தெய்வங்களான ஸ்ரீ ஐயப்பன் ஆலய 15- ஆம் ஆண்டு ஐயப்பன் பவனி விழா வெகு விமர்சையாக நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் ஐயப்பனுக்கு சிறப்பு மலர் அலங்காரம் செய்து 18 வகைகளான சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டு
ஸ்ரீ ஐயப்பனுக்கு படி பூஜையும் பஜனையும்
மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
ஸ்ரீ ஐயப்ப சாமி அலங்கார ரதத்தில் முக்கிய வீதிகள் வழியாக பவனி புறப்பாடு நடைபெற்றது.
இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
விழாவின் ஏற்பாடுகளை மாதாந்திர உத்திர பூஜை வழிபாட்டு குழுவின் தலைவர் எம்.கே.கே.மோகன் மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர்.