உத்தமபாளையம் அருகே ஸ்ரீ சண்முகநாதன் திருக்கோவிலில் தைப்பூச திருவிழா வருடாபிஷேகம்

தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே உள்ள காமய கவுண்டன்பட்டி பசுமலை அடிவாரத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ சண்முகநாதன் திருக்கோவிலில் நாளை தைப்பூசத் திருவிழா வெகு சிறப்பாக நடைபெற உள்ளதையடுத்து ஐந்தாம் ஆண்டு வருஷாபிஷேக வைபவத்தில் ஸ்ரீ சண்முகநாதருக்கு பால் தயிர் நெய் நவதானியம் போன்ற சிறப்பு ஹோமம் செய்து மகா அபிஷேகம் மிகச் சிறப்பாக நடைபெற்றது இந்த நிகழ்ச்சியில் சண்முகநாதரின் பக்த கோடிகள் ஏராளமானோர் பங்கேற்று சண்முகநாதன் அருள் பெற்றனர்.
நாளை ஞாயிற்றுக்கிழமை தைப்பூச திருவிழா மிக சிறப்பாக நடைபெற உள்ளது இந்த விழாவையொட்டி காலை 8:00 மணி முதல் மதியம் 4 மணி வரை தொடர்ந்து விழாவில் பங்கேற்கும் ஆன்மீக பக்தர்கள் மற்றும் பொதுமக்களுக்கு சிறப்பான சைவ விருந்து அன்னதானம் அளிக்கப்பட உள்ளது.
இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் கௌரவத் தலைவர் நீதியரசர் அணைப்பட்டி ஆர் ரகுபதி ஒருங்கிணைப்பாளர் நீதிபதி ராம பார்த்திபன் துணைத் தலைவர்கள் கம்பம் புதுப்பட்டி வி.யுவராஜா திருப்பூர் டி. வெங்கடேஷ் கோவில் செயலாளரும் தேனி மாவட்ட அறங்காவலர் உறுப்பினருமான கே ஆர் ஜெயபாண்டியன் இணைச்செயலாளர் எல் ஆர் எஸ் ராமமூர்த்தி பொருளாளர் அணைப்பட்டி ஆர் இளங்கோவன் ஆகியோர் விழாவிற்கான ஏற்பாடுகளை சிறப்பாக செய்திருந்தனர் கோவில் பராமரிப்பு ஜி.முருகன் கோவில் அர்ச்சகர் மூ. கணபதி வேல் மற்றும் பூசாரிகள் சுவாமி சண்முகநாதன் அலங்காரங்கள் சிறப்பாக செய்திருந்தனர்