ந.மணிவண்ணன்
பாப்பிரெட்டிப்பட்டி செய்தியாளர்
பாப்பிரெட்டிப்பட்டி ஆக 6
தர்மபுரி மாவட்டம் பொம்மிடி ரயில்வே ஸ்டேஷன் அருகே பொ.மல்லாபுரம் டவுன் பஞ்சாயத்தில் இருந்து பண்டார செட்டிப்பட்டி செல்லும் வழியில் ரயில்வே சார்பில் தண்ணீர் செல்வதற்காக தரைப்பாலம் அமைக்கப்பட்டுள்ளது.
இந்தப் பாலத்தின் வழியாக பண்டார செட்டிபட்டி திப்பிரெட்டிஹள்ளி சொரக்காய்பட்டி மணலூர் சந்தனூர் மேடு கொண்டகரஹள்ளி உள்ளிட்ட பல கிராமங்களைச் சேர்ந்த 3 ஆயிரத்திற்கும் அதிகமான கிராம மக்கள் இந்தத் தரை பாலத்தை பயன்படுத்தி வருகின்றனர் மேலும் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மற்றும் அரசு மகளிர் விடுதி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் செல்ல இந்த பாதையை பயன்படுத்தி வருகின்றனர்.இந்த நிலையில் இப்பொழுது தரைப்பாலத்தை நீட்டிப்பு செய்யததையடுத்து 20 மீட்டர் தூரம் குழி தோண்டப்பட்டு ரயிலை நிர்வாகம் அதற்கான பணிகளை செய்து வருகின்றனர்
இதனால் அந்த பகுதி மக்கள் செல்லும் சாலையில் மண் கொட்டப்பட்டு ரயில்வே நிர்வாகம் சமன் செய்து கட்டுமான பணிகளை செய்து வருகின்றது இந்த நிலையில் இருக்கும் தரைப்பாலத்தை நீட்டிப்பு செய்வதை கைவிட்டு போக்குவரத்துக்கு இடையூறு இல்லாமல் அகலப்படுத்தி கொடுக்க வேண்டும் பாலம் நீட்டிப்பு பணிகளை உடனடியாக நிறுத்த வேண்டும் எனக் கூறி 200க்கும் அதிகமான பொதுமக்களும் மற்றும் பெண்களும் நேற்று திடீரென தரைப்பாலத்தின் முன்பு திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்
தகவல் அறிந்து வந்த பாப்பிரெட்டிப்பட்டி தாசில்தார் பார்வதி பொம்மிடி இன்ஸ்பெக்டர் கார்த்திகாயினி .ஆர்.ஐ.திவ்யேஸ்வரி மற்றும் ரயில்வே போலீசார் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர் மேலும் தாசில்தார் பார்வதி பாலம் அகலப்படுத்துவது குறித்து பொதுமக்கள் மனு அளித்திருக்கின்றனர் உயர் அதிகாரிகளுக்கு மனுவை அனுப்பி நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்ததின் பேரில் பொதுமக்கள் கலைந்து சென்றனர்