தென்காசி மாவட்டம், சைபர் கிரைம் குற்றங்களை தடுக்கும் பொருட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீனிவாசன் உத்தரவின் பேரில் மக்கள் அதிகம் கூடும் பகுதிகளான பேருந்து நிலையம், மார்க்கெட், கோவில்கள் மற்றும் பள்ளி கல்லூரி களுக்கு நேரில் சென்று சைபர் குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
அதன் தொடர்ச்சியாக சைபர் கிரைம் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ரமேஷ் தலைமையிலான சைபர் கிரைம் காவல்துறையினர் இசக்கி வித்யாஸ்ரம் சி.பி எஸ் இ பள்ளி மாணவ மாணவிகளிடம் சைபர் குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டு வருகிறது, சைபர் குற்றவாளிகள் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி நூதனமாக பணம் திருடக்கூடும் எனவும், இணையதளத்தில் இலவசமாக அல்லது 80% சலுகை எனக்கு கூறி ( Power Bank, Headset, Mobile Phone) என வரும் விளம்பரத்தை நம்பி பணத்தை இழந்து விடாதீர்கள், சமூக வலைதளங்களில் தங்களின் புகைப்படங்களை யாருக்கும் பகிர வேண்டாம், Unknown Number இல் இருந்து Video call வந்தால் எடுக்கக் கூடாது, உங்கள் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து உங்களை யாரேனும் மிரட்டினால் தயங்காமல் காவல்துறைக்கு தெரிவிக்க வேண்டும் என்றும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மேலும் பண மோசடி குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
மேலும் சைபர் கிரைம் மோசடி குறித்து புகார் அளிக்கும் தொடர்பு எண் 1930 மற்றும் இணைய முகவரி www.cybercrime.gov.in ஐ அணுகவும் எனவும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.