தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினின் பிறந்த நாளையொட்டி ஆதரவற்ற இல்லத்தில் குழந்தைகளுக்கு அறுசுவை உணவு கம்பம் நகர் மன்ற தலைவர் வழங்கினார் தமிழக துணை முதல்வர் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலினின் பிறந்த நாளை முன்னிட்டு தேனி மாவட்டம் கம்பம் நகர் மன்ற தலைவர் வனிதா நெப்போலியன் தலைமையில் கம்பம் முகைதீன் ஆண்டவர் புரம் நகராட்சி மேல்நிலைப்பள்ளி ஆங்கூர் ராவுத்தர் பெண்கள் மேல்நிலைப்பள்ளி அரசு கள்ளர் மேல்நிலைப்பள்ளி ஆகிய பள்ளிகளில் கடந்த 2023 2024 கல்வி ஆண்டில் பத்தாம் வகுப்பு மற்றும் பனிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ மாணவ செல்வங்களுக்கு அவர்களை ஊக்குவிக்கும் விதமாக சிறப்பு பரிசுத்தொகுப்பு மற்றும் பாராட்டு சான்றிதழ்களும் வழங்கப்பட்டன

இதை தொடர்ந்து அண்ணா புரம் ரேமா அறிவுத்திறன் குறைபாடு உடைய குழந்தைகளுக்கான சிறப்பு பள்ளியில் அங்குள்ள குழந்தைகளுக்கு அறுசுவை உணவும் இனிப்புகளும் வழங்கினார் இதன் பின்பு கம்பம் சிவனடியார் மண்டபத்தில் ஏழைகளுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது

இந்த நிகழ்ச்சியில் நகர்மன்ற துணைத் தலைவர் சுனோதா செல்வக்குமார் நகர்மன்ற உறுப்பினர்கள் சம்பத்குமார் சாதிக் அலி சர்புதீன் பார்த்திபன் ராஜா அபிராமி சுந்தரி வீரபாண்டியன் விஜயலட்சுமி ரோஜா ரமணி வளர்மதி சகிதா பானு விருச்சிகம்மாள் அபிராமி அமுதா எபினேசர் சுபத் ராஜ் சொக்கராஜா வசந்தி அன்பு க்குமாரி உள்பட அனைத்து நகர் மன்ற உறுப்பினர்களும் பள்ளி தலைமை ஆசிரியர்கள் பள்ளி இருபால் ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் ஏழை எளிய பொதுமக்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *