தென்காசி மாவட்டம் கடையம் அருகே இரவணசமுத்திரத்தை சேர்ந்த வாசுதேவநல்லூர் எஸ்.தங்கப்பழம் மருத்துவ கல்லூரி மாணவி மிஸ்பா குற்றாலம் செய்யது பள்ளி மாணவி ஷாஜிதா ஆகிய சகோதரிகள் யோகா, ரோலர் ஸ்கேட்டிங்கில் பல்வேறு சாதனைகள் செய்தும் தொடர்ந்து பல சமூக விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி உலகசாதனை புத்தகத்திற்கு தேர்வாகி உள்ளனர்.

சாதனை சகோதிரிகள் இரவணசமுத்திரம் கிராமத்தை சேர்ந்த மளிகை கடை ஊழியரான முகம்மது நஸீருதீன்-ஜலிலா தம்பதிகளின் மகள்கள் குற்றாலம் செய்யது பள்ளி 6 ஆம் வகுப்பு பயிலும் மாணவி சாதனைச்சுடர் விருது பெற்ற ஷாஜிதா ஜைனப், வாசுதேவநல்லூர் எஸ்.தங்கப்பழம் இயற்கை மற்றும் யோகா மருத்துவக்கல்லூரி முதலாமாண்டு பி.என்.ஒய்.எஸ் மாணவி சிங்கப்பெண் விருது பெற்ற மிஸ்பா நூருல் ஹபிபா ஆகிய சகோதரிகள் யோகா, ரோலர் ஸ்கேட்டிங்கில் போட்டிகள் மட்டு மில்லாமல் பல சமூக விழிப்புணர்வுகளில் தங்களை ஈடுபடுத்திக்
பல்வேறு விருதுகளையும் வாங்கி குவித்து வருகின்றனர்.

இவர்களுக்கு பயிற்சி ஆசிரியராக குற்றாலம் குரு கண்ணன் என்பவர் இருந்து வருகிறார்,இந்த அக்கா/தங்கை கல்வியுடன் இவர்களது சாதனைகள்,சமூக விழிப்புணர்வு நிகழ்வுகள் அனைத்தும் அனைவராலும் பாராட்டும் விதம் அமைந்துள்ளது இவர்களது திறமைகளை மேலும் ஊக்குவிக்கும் வகையில் ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில் உள்ள சாம்பியன் புக் ஆஃப் வேர்ல்ட் ரிக்கார்ட் என்ற அமைப்பு இச்சகோதரிகளை சாதனை புத்தகத்தில் இடம் பெற தேர்ந்து எடுத்துள்ளனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *