பாபநாசம் அருகே ராஜகிரியில் தமிழக வெற்றிக் கழக அலுவலக திறப்பு விழா…

தமிழக வெற்றிக்கழக தலைவர் தளபதி விஜய் மற்றும் மாநில பொதுச் செயலாளர் புஸ்ஸி. ஆனந்த் ஆகியோரின் ஆலோசனைப்படி தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் ஒன்றியத்தில் பாபநாசம் தெற்கு ஒன்றிய செயலாளர் சாகுல் ஹமீது, தெற்கு ஒன்றிய இணை செயலாளர் முகமது மாலிக் ஆகியோர் தலைமையில் ராஜகிரி கிளை கழக அலுவலகம் திறப்பு விழாவினை தஞ்சை வடக்கு மாவட்ட செயலாளர் நிஜாம் அலி, மற்றும் பாபநாசம் சட்டமன்றத் தொகுதி பொறுப்பாளர் அசாருதீன் உதுமான் அலி ஆகியோர் கலந்து கொண்டு ரிப்பன் வெட்டி திறந்து வைத்தனர்.மேலும் பல்வேறு கிளை கழக பகுதிகளில் கொடியேற்றி வைத்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி சிறப்புரையாற்றினர்.

நிகழ்ச்சியில் தமிழக வெற்றிக் கழகத்தின் மாவட்ட, ஒன்றிய,கிளை கழக நிர்வாகிகளும் சார்பணி நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *