பாபநாசம் செய்தியாளர்
ஆர்.தீனதயாளன்

பாபநாசம் அருகே தைப்பூச விழா தினத்தில், வள்ளலார் 12-ஆம் ஆண்டு கருத்தரங்கம்..

பல்வேறு துறை சார்ந்த அறிஞர் பெருமக்கள், மாணவ மாணவிகள் உட்பட பலர் பங்கேற்பு தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலுக்கா தென்சருக்கை பகுதியில் வள்ளலார் நினைவு மண்டபம் அருகே அமைந்துள்ள திரௌபதி அம்மன் ஆலயம் வளாகத்தில் தைப்பூச விழா தினத்தில் வள்ளலார் நினைவு 12-ஆம் ஆண்டு கருத்தரங்கம் நிகழ்ச்சி நடைபெற்றது..

நிகழ்ச்சியில் அனைத்து மதம் சார்ந்த ஆன்மீக அன்பர்கள், சமூக ஆர்வலர்கள், மாணவ மாணவிகள் என பலரும் கலந்து கொண்டு வள்ளலாரின் புகழ் பற்றி பேசினர்.

இறுதியில் வள்ளலார் பற்றிய பேச்சு போட்டியில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது வள்ளலார் நினைவாக நிகழ்ச்சியில் பங்கேற்ற 100-க்கும் மேற்பட்டவர்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை தென்சருக்கை கிராமவாசிகள் மற்றும் விழாக்குழுவினர்கள் செய்திருந்தனர்..

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *