வெ.முருகேசன்- மாவட்ட செய்தியாளர், திண்டுக்கல்.
திண்டுக்கல்லில் ஸ்ரீ சாலை கருப்பணசாமி ஆலய மகா கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது.
திண்டுக்கல் மாநகர் குடைப்பாறைப்பட்டி பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ விநாயகர், அருள்தரும் ஸ்ரீ சாலை கருப்பணசாமி ஆலய மகா கும்பாபிஷேக விழா இன்று காலை 9.20 மணிக்கு மேல் 10.20 மணிக்குள் நடைபெற்றது. முன்னதாக சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க மஹா யாக வேள்விகள் நடைபெற்றது.
இதையடுத்து கடம் புறப்பட்டு கோயிலை சுற்றி வலம் வந்த பின்னர் விமான கலசத்தில் புனித நீர் ஊற்றப்பட்டு மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பின்னர் பக்தர்கள் அனைவருக்கும் மாபெரும் அன்னதானம் வழங்கப்பட்டது.
இதில் 25-வது வார்டு மாமன்ற உறுப்பினர் சிவக்குமார் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் மற்றும் பக்தர்கள் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
இவ்விழாவிற்கான ஏற்பாட்டினை கோயில் பூசாரிகள், குடைப்பாறைப்பட்டி ஊர் பொதுமக்கள் மற்றும் முக்கியஸ்தர்கள் செய்திருந்தனர்.