திருவாரூர் மாவட்டத்தில் 182 பயனாளிகளுக்கு .1 கோடியே 27 லட்சத்து 40 ஆயிரத்து 60 மதிப்பிலான நலத்திட்ட உதவி…
தமிழ்நாடு முதலமைச்சர் சென்னையிலிருந்து நகராட்சி நிர்வாகம் மற்றும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் சார்பில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கியதனை தொடர்ந்து, திருவாரூர் மாவட்டத்தில் 182 பயனாளிகளுக்கு .1 கோடியே 27 லட்சத்து 40 ஆயிரத்து 60 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை திருவாரூர் மாவட்ட ஆட்சியர் தி.சாருஸ்ரீ திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி.கே.கலைவாணன் அவர்கள் ஆகியோர் வழங்கினார்கள்

மாவட்ட ஊராட்சி த்தலைவர் திரு.கோ.பாலசுப்ரமணியன் உடனிருந்தார்.ஆதிதிராவிடர் நலத்துறையின் சார்பில் .19 ஆயிரத்து 656 மதிப்பிட்டில் 3 பயனாளிகளுக்கு இலவச சலவைப் பெட்டியும், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் சார்பில் .11 ஆயிரத்து 276 மதிப்பீட்டில் 2 பயனாளிகளுக்கு இலவச தையல் இயந்திரமும் தாட்கோ சார்பில் முதலமைச்சரின் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் சமூக பொருளாதார மேம்பாட்டிற்கான தொழில் முனைவு திட்டத்தின் கீழ் 9 பயனாளிகளுக்கு .17 லட்சத்து 99 ஆயிரத்து 169 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளும், 7 பயனாளிகளுக்கு 35 லட்சம் மதிப்பீட்டில் நன்னிலம் மகளிர் நில உடைமை திட்டத்தின் கீழ் நலத்திட்ட உதவிகளும் 10 ஆயிரம் மதிப்பீட்டில் 4 தூய்மை பணியாளர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு நலத்திட்ட உதவிகளும், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறையின் சார்பில் 106 பயனாளிகளுக்கு 15 லட்சத்து 90 ஆயிரம் மதிப்பீட்டில் இ-பட்டாவும், கூட்டுறவு உணவு நுகர்வோர் பாதுகாப்புத்துறை சார்பில் 32 பயனாளிகளுக்கு புதிய மின்னணு குடும்ப அட்டையும், மாவட்ட தொழில் மையத்தின் சார்பில் அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டத்தின் கீழ் 8 பயனாளிகளுக்கு .38 லட்சத்து 9 ஆயிரத்து 400 மதிப்பிலான மானியத்திலான கடனுதவிகளும், பிரதம மந்திரி வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் கீழ் 4 பயனாளிகளுக்கு 5 லட்சத்து 50 ஆயிரத்து 979 மதிப்பிலான மானியத்திலான கடனுதவிகளும் வேலையில்லா இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் கீழ் 7 பயனாளிகளுக்கு .14 லட்சத்து 49 ஆயிரத்து 580 மதிப்பிலான மானியத்திலான கடனுதவிகளும் என 182 பயனாளிகளுக்கு 1 கோடியே 27 லட்சத்து 40 ஆயிரத்து 60 மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது.
நிகழ்வில், திருவாரூர் வருவாய் கோட்டாட்சியர் சௌம்யா மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அலுவலர் அமுதா மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அலுவலர் சங்கர் நகர்மன்றத்தலைவர்கள் புவனப்பிரியா செந்தில் (திருவாரூர்), கவிதா பாண்டியன் (திருத்துறைப்பூண்டி), .பாத்திமா பஷிரா தாஜ் பணிநியமன குழு உறுப்பினர் பிரகாஷ், மாவட்ட திட்ட குழு உறுப்பினர் சங்கர் நகராட்சி ஆணையர்கள் உள்ளிட்ட அரசு அலுவலர்கள், உள்ளாட்சி அமைப்பின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *