தமிழகம் கேரளாவை இணைக்கும் வழிவிடும் முருகன் கோவிலில் தைப்பூச திருவிழா ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் தேனி மாவட்டம் லோயர் கேம்ப் குமுளி மலைச்சாலையில் தமிழகம் கேரளாவை இணைக்கும் குமுளி மழைச்சாலையில் அமைந்துள்ள வழிவிடும் முருகன் திருக்கோவிலில் தைப்பூச திருவிழாவை முன்னிட்டு தமிழ் கடவுள் முருகனுக்கு சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டு முருகன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்
இந்த திருவிழாவில் கம்பம் கூடலூர் மற்றும் இதனை சுற்றியுள்ள ஆயிரக்கணக்கான பக்தர்கள் காலை 6 மணி முதல் தொடர்ந்து முருகனை வழிபட்டு முருகன் அருள் பெற்று சென்றனர். மேலும் கோயில் வளாகத்தில் பக்தர்களுக்கு சர்க்கரை பொங்கல் தயிர் சாதம் லெமன் சாதம் வெஜிடபிள் பிரியாணி ஆகிய அறுசுவை சைவ விருந்து அன்னதானம் பக்தர்களுக்கு வழங்கப்பட்டது