“செய்தி ஜீவா செந்தில் “
கடலூர் மாவட்டம் வடலூரில் அருட்பிரகாச வள்ளலார் நிறுவிய சத்திய ஞானசபையையும்,பசிப்பிணி போக்க சத்திய தருமசாலையும் நிறுவினார்,வள்ளலார் நிறுவிய ஞான சபையில் ஆண்டுதோறும் நடைபெறும், தைப்பூசவிழா இந்த ஆண்டு 155, ஆண்டு தைப்பூச விழாவாக நடைபெற்றது.
தைப்பூச விழாகொடியேற்றம்.நேற்று ஜனவரி 31ந்தேதி சனிக்கிழமை வள்ளலார் பிறந்த மருதூர்,தண்ணீரால்விளக்குஎரித்த’கருங்குழியிலும்.வள்ளலார்சித்திபெற்றமேட்டுக்குப்பத்திலும்,தருமச்சாலையிலும், சன்மார்க்க கொடி ஏற்றப்பட்டது.
தொடர்ந்து,ஞானசபையில் கொடி ஏற்றம் ,பார்வதிபுரம் கிராமமக்கள் சார்பில் நடைபெற்றது,தர்மசாலை மேடையில் திருவருட்பா இன்னிசையும்,இரவு, 6 மணி முதல் 9 மணி வரை தருமச்சாலை மேடையில் சன்மார்க்க சொற்பொழிவும் நடைபெற்றது .
தைப்பூச விழாவில் சிறப்பு நிகழ்ச்சியான, ஜோதி தரிசனம்; (பிப்ரவரி,1ந்
தேதி)தைப்பூசதிருவிழாவையொட்டி (ஞாயிற்றுக்கிழமை)
காலை,6மணி,10மணி,பகல்1மணி,இரவு7மணி,10மணிக்கும்நடைபெற்றது தொடர்ந்து, இன்று திங்கள்,காலை5.30ஆக 6 வதுகாலம், 7திரை நீக்கியஜோதிதரிசனம்,
நடைபெறுகிறது.
காலை 6 மணி ஜோதி தரிசனத்தில் முன்னாள் அமைச்சர் எம் சி சம்பத் விருத்தாசலம் சட்டமன்ற உறுப்பினர் ராதாகிருஷ்ணன் ஜோதி தரிசனம் செய்கிறார் தொடர்ந்து காலை 10 மணி ஜோதி தரிசனத்தில் அமைச்சர்கள், எம் ஆர் கே பன்னீர்செல்வம், டி ஆர்பி ராஜா,கடலூர் கலெக்டர் ஆதித்யா செந்தில்குமார் எம்எல்ஏ தமிழரசி ரவிக்குமார்,சுந்தரி ராஜா,என்எல்சி தலைவர் பிரசன்னாகுமார் மோட்டுப்பள்ளி,ஜோதி தரிசனம் பார்த்தனர்,தொடர்ந்து ஒரு மணி ஜோதிதரிசனத்தில் தமிழக ஆளுநர் ரவி ஜோதி தரிசனம் பார்த்தார்,இதனை கான தமிழகம் மற்றும் உலகெங்கும் வாழும் தமிழர்கள்,லட்சக்கணக்கான சன்மார்க்க அன்பர்கள் திரண்டு இருந்தனர்.
இதற்காக தமிழகத்தின் பலபகுதியில் இருந்து சிறப்பு பேருந்துகள் மற்றும் ரயில்கள் இயக்கப்படுகிறது,திரும்பிய பக்கம் எல்லாம் அன்னதானமும் சன்மார்க்க சொற்பொழிவும் நடைபெற்றது,இதேபோன்றுஞான சபை உலகத்திலும் அருமை சாலையிலும் அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி ,தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி , என்கிற மகா மந்திரம் ஒலிக்கிறது.
விழாவை ஒட்டி திருவிழா கடைகள், சிறு கடைகள் பெரு கடைகள் உள்ளது.மக்களை இருந்து சில்வர், பிளாஸ்டிக் பாத்திரங்கள்,பேரிச்சம்பழம் மற்றும் பழங்கள், சிப்ஸ் வகைகள்,பூச்செடிகள் என பல்வேறு விதமான கடைகள் இருந்தது, இதில் ஆண்கள், பெண்கள், சிறுவர்கள் ஆர்வமுடன் பொருள் வாங்கிச்,செல்கிறார்கள்.
தைப்பூச விழாவை ஒட்டி அசம்பாவிதங்கள் இதுவும் நடைபெறாமல் இருக்க, மாவட்ட போலிஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் தலைமையில், 2000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். காலை ஜோதி தரிசனத்தில்,பனியையும் குளிரையும், பொருட்படுத்தாமல், லட்சக்கணக்கான பக்தர்கள் ஜோதி தரிசனம் செய்தனர்,அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ் ஜோதி, தனிப்பெருங்கருணை, அருட்பெருஞ்ஜோதி , என்ற மகா மந்திரத்தினை, உச்சரித்தவாறு தரிசனம் செய்தார்கள்,நீண்ட தூரங்களிலே, பக்தர்கள் இறக்கி விடப்படுவதால் ஜோதி தரிசனம் செய்ய ,ஜோதி தரிசனம் நடைபெறும் ஞான சபைக்கு நடந்தே செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது,தைப்பூச விழா ஏற்பாடுகளை,தெய்வ நிலையஅறங்காவலர் குழு தலைவர்அழகானந்தம் மற்றும் நிர்வாக அலுவலர் ராஜா சரவணக்குமார்,அறங்காவலர்கள் கரகலட்சுமி,கனகசபை, ஸ்ரீராமுலு,கிஷோர் குமார்,பார்வதிபுரம் கிராம மக்கள் ஆகியோர் செய்து இருந்தனர்.