கோவை மாவட்டம் வால்பாறை நகராட்சியில் பணிபுரிந்து வரும் தூய்மை பணியாளர்கள் அனைவரின் நலன் கருதி நகராட்சி நிர்வாக இயக்குனர் மற்றும் திருப்பூர் மண்டல இயக்குனர் ஆகியோரின் ஆலோசனைக்கு இணங்க நகர்மன்ற தலைவர் அழகு சுந்தர வல்லி செல்வம் மற்றும் நகராட்சி ஆணையாளர் ரகுராமன் ஆகியோர் தலைமையில் சிறப்பு மருத்துவ முகாம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடைபெற்றது
இந்நிலையில் பணியாளர்கள் அனைவருக்கும் முழு உடல் பரிசோதனை செய்து உரிய ஆலோசனைகள் வழங்கப்பட்டது பின்பு அனைவருக்கும் அசைவ உணவு வழங்கப்பட்டது இந்நிகழ்ச்சியில் நகராட்சி துப்புரவு அலுவலர் செந்தில் குமார், நகராட்சி துப்புரவு ஆய்வாளர் வீரபாகு, நகர் மன்ற உறுப்பினர்கள், டெங்கு தடுப்பு பணியாளர்கள், தூய்மை இந்தியா திட்ட பணியாளர்கள் உள்ளிட்ட அனைவரும் கலந்து கொண்ட நிலையில் களப்பணி உதவியாளர் பாலசுப்பிரமணியம், துப்புரவு பணி மேற்பார்வையாளர்கள் நித்தியானந்தம், ராஜேந்திரன், சுதாகர்,அருக்காணி, ராதாகிருஷ்ணன், ராமச்சந்திரன் ஆகியோர் நிகழ்ச்சி ஏற்பாடுகளை செய்து சிறப்பித்தனர்