திண்டுக்கல் மாவட்டம் பழனி சாலை முத்தனம்பட்டி அருகே உள்ள PSNA பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் 36வது பட்டமளிப்பு விழாவில் சுமார் 160 முதுநிலை பட்டதாரி மாணவ, மாணவிகள் தங்களுக்கான பட்டங்களை பெற்றுக் கொண்டனர்.

இவ்விழாவில் முதுநிலை கணினி பயன்பாட்டியல், வணிக முதுகலை மேலாண்மைப் துறை சார்ந்த மாணவர்கள் தங்களுக்கான பட்டங்களை பெற்றனர்.இவ்விழாவில் அண்ணா பல்கலைக்கழக தேர்வு வரிசை முதல் மூன்று இடங்களை பெற்ற பட்டியலில் முதுநிலை கணினி பயன்பாட்டியல் துறை சார்ந்த நாள்வரும், முதுகலை வணிக மேலாண்மை துறையில் நால்வரும் ஒருவரும் என எட்டு மாணவர்கள் இடம் பெற்றனர்.அவர்களுக்கு கல்லூரியின் சார்பாக தங்கப்பதக்கம் வழங்கி சிறப்பித்தனர்.

இவ்விழாவில் ஹைதராபாத் பல்கலைக்கழகத்தின் முன்னாள் தலைமை நிர்வாகியும்,இந்திய மேலாண்மை பல்கலைக்கழகத்தின் உதவி பேராசிரியர்.ஸ்ரீநிவாஸ் ராவ் மஹாகாளி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவ மாணவிகளுக்கான பட்டங்களுடன் கூடிய பரிசுகளை வழங்கினார். இவ்விழா கல்லூரியின் கல்லூரியின் முதல்வர் முனைவர்.வாசுதேவன் வரவேற்புரை மற்றும் முதுநிலை கணினி பயன்பாட்டியல், முதுகலை வணிக மேலாண்மை துறை தலைவர்கள்.மணிமாறன்.MBA ஜெகநாதன்.MCA சிறப்புரையுடன், இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட ஹைதராபாத் பல்கலைக்கழகத்தின் முன்னாள் தலைமை நிர்வாகியும்,இந்திய மேலாண்மை பல்கலைக்கழகத்தின் உதவி பேராசிரியர்.ஸ்ரீநிவாஸ் ராவ் மஹாகாளி மாணவர்களிடையே சிறப்புரை ஆற்றினார்.இந்த ஆண்டு கல்லூரி வளாக வேலைவாய்ப்பில் சுமார் 160 மாணவ, மாணவிகளுக்கான தங்கள் படிப்பு முடியும் முன்பே பல்வேறு பண்நாட்டு நிறுவனங்களில் வேலை வாய்ப்பு பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.இவ்விழாவில் பட்டங்களை பெற்ற மாணவ, மாணவிகளுக்கு PSNA கல்லூரி நிர்வாகத்தினர் சார்பாக தங்களது வாழ்த்துக்களையும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *