தாராபுரம் செய்தியாளர் பிரபு
செல்:9715328420
செலாம்பாளையம் கிராமத்தில் சட்டவிரோதமாக சாராயம் காய்ச்சிய இளைஞர் கைது. 200 லிட்டர் சாராய ஊரல் பறிமுதல். மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் விசாரணை .
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று மாவட்ட கலெக்டர் உத்தரவின் பேரில் மாவட்டம் முழுவதும் மது கடைகள் விடுமுறை விடப்பட்டிருந்தது. தாராபுரம் பகுதிகளில் மதுக்கடைகள் விடுமுறை விடப்பட்டது. இந்நிலையில் மதுக்கடைகள் அனைத்தும் மூடப்பட்ட நிலையில் தாராபுரம் மதுவிலக்கு அமலாக்க பிரிவு பொறுப்பு போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவி தலைமையில் தாராபுரம் நகரின் பல்வேறு பகுதிகளில் சோதனை மேற்கொண்டனர். நடைபெற்ற சோதனையில் செலாம்பாளையம் அமராவதி ஆறு அணைக்கட்டு பிரிவு அருகே உள்ள எம்ஜிஆர் நகர் பகுதியைச் சேர்ந்த கருப்புசாமி என்பவர் மகன் சுந்தரேஸ்வரன் என்கின்ற சுந்தர் வயது 28. இவர் பகுதியில் சட்டவிரோதமாக சாராயம் காய்ச்சி விற்பனை செய்வதற்காக 200 லிட்டர் சாராய ஊரலை விற்பனைக்காக வைத்திருந்த போது சம்பவ இடத்திற்கு சென்ற மதுவிலக்கு அமலாக்க பிரிவு இன்ஸ்பெக்டர் சம்பவ இடத்திற்கு சென்று சோதனை மேற்கொண்டதில் 200 லிட்டர் சாராய ஊறல் இருந்தது தெரியவந்தது. இதனை கைப்பற்றிய மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் மதுவிலக்கு காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் சுந்தரேஸ்வரன் சட்ட விரோதமாக சாராயம் காட்சி விற்பனை செய்து வந்தது தெரிய வந்தது.
இதை எடுத்து போலீசார் 200 லிட்டர் சாராய ஊரல் வைத்திருப்பதற்காக ட்ரம் ஒன்றையும் பறிமுதல் செய்து 200 லிட்டர் சாராய ஊரலை கீழே கொட்டி அளித்தனர். இது குறித்த போலீசார் வழக்கு பதிவு செய்து தாராபுரம் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். இச்சம்பவம் தாராபுரம் பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தியது.