தைப்பூச திருநாளை முன்னிட்டு , காஞ்சிபுரம் ஆதி காமாட்சி , ஆதி பீடா பரமேஸ்வரி காளிகாம்பாள் ஆலயத்தில் , காஞ்சிபுரம் , சிறுவாக்கம் , ஸ்கந்தாலயா ஆலய நிறுவனர், பாம்பன் அருட்சித்தர் தவத்திரு , சஞ்சீவி ராஜா சுவாமிகள் முன்னிலையில், சென்னை , கற்பகாம்பாள் நாட்டிய பள்ளியின் சார்பில், நாட்டிய பயிற்சியாளர் , நாட்டியஅரசி , தொலைக்காட்சி புகழ் கலைமாமணி சரண்யா தலைமையிலான சிறுமிகளின் நாட்டிய நிகழ்ச்சி நடைபெற்றது. இளஞ்சிறுமிகளின் நடனத்தை கண்டு ரசித்த பொதுமக்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்தனர் . இதற்கான ஏற்பாடுகளை ஆலய அறங்காவலர் ஏழுமலை (ரவி) மற்றும் நிர்வாக அறங்காவலர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.