கடலூர் மாநகராட்சி ஆணையாளரிடம் திடக்கழிவு பயன்பாட்டு கட்டணத்தை நீக்க மனு.

கடலூரில் பெரிதும், சிறிதுமான திருமண மண்டபங்கள் இயங்கிவருன்றன.இவைகள் யாவும், கொரோனா கால கட்டங்களிலும் மற்றும் ஊரடங்கு காலங்களிலும் அதன்பிறகும் மண்டபங்களின் பராமரிப்பு மற்றும் பணியாளர்களின் ஊதியம் ஆவணங்களை புதுப்பித்தல், மற்றும் வரி செலுத்துதல் ஆகியவைகளுக்கு மிகவும் சிரமப்பட்டு திருமண மண்டபங்களை நடத்தி வருகிறோம்.
கொரோனா காலங்களில் மக்கள் பெருமளவு திருமணங்கள் கோவிலில் செய்து பழகிவிட்டனர். ஆதலால் தற்போழுதும் பெரும்பாலும் கோவில்களில் திருமணம் செய்வதையே மக்கள் பின்பற்றி வருகிறார்கள். உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மாநகராட்சி .மண்டபங்களில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி ஒருவேளை மட்டுமே முடித்துவிடுகிறார்கள். ஒரு சில திருமணங்கள் மட்டுமே நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் கடந்த 2022-ம் ஆண்டு கடலூர் நகராட்சியில் இருந்து மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது. ஆணல் 20/7 ஆண்டுமுதல் திடக்கழிவு பயன்பாட்டு கட்டணம் செலுத்தச்சொல்லி 6 (ஆறு) மாத காலத்திற்கு முன்பு தான் அறிவிப்பு வந்துள்ளது.. 2019 மற்றும் 2020-ம் வருட ஆண்டு காலகட்டங்களில் கொரோனா காலம் என்பதால் தமிழகம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு திருமண மண்டபங்கள் பயன்பாடு இன்றி முற்றிலும் முடங்கி காணப்பட்டன. ஆனால் மண்டபத்திற்கான பராமரிப்பு செல்வ மற்றும் ஆவணங்கள் புதுப்பித்தல் செலவு ஆகியவற்றிற்கு மண்டபங்களின் உரிமையாளர்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளானோம். மிகவும் சிரம நிலையில் லாபம் இன்றி கஷ்டப்பட்டு மண்டபங்களை நடத்தி வரும் எஙகளுக்கு மேற்படி திடக்கழிவு பயன்பாட்டு கட்டணத்தை எப்படி எதிர் கொள்வது என்று தெரியவில்லை. மேலும் 2017-ம் ஆண்டு முதல் நகராட்சியோ, அதன் பின்னீட்டு 2022 முதல் மாநகராட்சியோ மண்டபங்களின் திடக்கழிவு நீக்கத்திற்கு இதுநாள்வரை எவ்வித நடவடிக்கையும் எடுக்காத நிலையில் கொரோனா ஊரடங்கு காலக்கட்டத்திற்கும் சேர்த்து திடக்கழிவு செலுத்தச்சொல்லி மாநகராட்சி அறிவிப்பு கொடுத்துள்ளது எங்களுக்கு மிகவும் அதிர்ச்சியாகவும், கஷ்டமாகவும் உள்ளது.

எனவே கனம் அம்மா அவர்கள், இவ்விண்ணப்பத்தினை பரிசீலனை செய்து மண்டபங்களில் திடக்கழிவு பயன்பாட்டுக் கட்டணத்தை முற்றிலுமாக நீக்க ஆவன செய்யுமாறு மாநகராட்சி ஆணையாளர் திருமதி மரு.அனு அவர்களிடம் கடலூர் திருமண மண்டப உரிமையாளர் நல சங்கத்தின் தலைவர் கனகசபை, செயலாளர் சீனிவாசன், பொருளாளர் வைரவேல் உள்ளிட்ட பொறுப்பாளர்கள் மனுவை வழங்கினார்கள். உடன் 15-க்கும் மேற்பட்ட நல சங்க உறுப்பினர்கள் கலந்து கொண்டனர் .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *