விருதுநகர் மாவட்டம்
இராஜபாளையம் நகராட்சி அங்கீகரிக்கப்பட்ட புதுப்பாளையம் விரிவு அபிவிருத்தி திட்டத்தின் கீழ்
60 அடி அகல புறவழி திட்டச்சாலை அமைக்க பணிகள் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் தொடங்கியது இந்நிலையில் அந்த பகுதியில் வசிக்கும் மக்கள் எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல் தங்களின் வீடுகளை இடிப்பதாக கூறி பணிகளை நிறுத்தினர் இதுகுறித்து நீதி மன்றத்தில் வழக்கு நடந்துவருகிறது
இந்நிலையில் வட்டாட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் கருத்து கேட்பு கூட்டத்திற்கு அழைப்பு விடுத்த நிலையில் பொதுமக்கள் ஆலோசகர் வள்ளிநாயகம் தலைமையில் சென்றனர் வட்டாட்சியர் ராமசுப்பிரமணியம் நகராட்சி ஆணையர் நாகராஜன் ஆகியோர் பொதுமக்களிடம் இதுகுறித்து கேட்டபோது பொதுமக்கள் தங்களின் வீடுகளை எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல்,அதிரடியாக தங்களின் வீடுகளை இடித்து சேதப்படுத்தியது
தொடர்பாக வழக்கு நிலுவையில் உள்ளது தற்போது ஏன் இந்த கூட்டம் எங்களுக்கு சாலை அமைப்பதில் எந்த உடன்பாடும் இல்லை என்று கூறியதையடுத்து அதிகார்கள் இந்த தகவலை மேலிடத்துக்கு பரிசீலனைக்கு அனுப்புகிறோம் என்று கூறி கூட்டத்தை முடித்துக்கொண்டனர் இதனால் அங்கு பரபரப்பு நிலவியது குறிப்பிடத்தக்கது