இரண்டு வருடத்துக்கு ஒருமுறை நடக்கும் இந்த வினோத திருவிழாவில் பல ஊர்களில் இருந்தும் வருகை புரிந்த பக்தர்களும் திரளாக கலந்துகொண்டதும் குறிப்பிடத்தக்கது. கொடைக்கானல் மலைகிராமத்தில் நடைபெற்ற வினோத சேத்தாண்டி திருவிழா, ஆயிரக்கணக்கான ஆண்கள் வயது வேறுபாடு இன்றி கலந்து கொண்டு சேற்றை உடம்பில் பூசி கொண்டு கொண்டாடினார்மலைகளின் இளவரசியான கொடைக்கானலில் கீழ்மலை பகுதிகளில் 50 கும் மேற்பட்ட மலைகிராமங்கள் மற்றும் உட்கடை கிராமங்களும் உள்ளன.
இந்தப் பகுதியில் வசிக்கும் மலைக்கிராம மக்கள் விவசாயம் செய்வதையே தங்களது பிரதான தொழிலாக செய்து வருகின்றனர். கீழ்மலைகிராமப் பகுதியில் உள்ள முக்கிய விவசாய கிராமம் தாண்டிக்குடி ஆகும்.இங்குள்ள பட்டாளம்மன் முத்தாலம்மன் கோயில் திருவிழா மூன்று நாட்கள் நடைபெறும்.
இந்த திருவிழாவில் அம்மனுக்கு பல்வேறு அபிஷேகங்கள் செய்யப்பட்டு முதல் நாளான நேற்று கரியமாள் சுவாமிக்கு சேத்தாண்டி வேடம் போடும் நிகழ்ச்சி நடைபெற்றது.இந்த நிகழ்ச்சியில் தாண்டிக்குடி ,மங்களம் கொம்பு , பட்லாங்காடு , கொடலங்காடு ,பண்ணைக்காடு ,அரசன் கோடை , காமனூர் உள்ளிட்ட மலைகிராமங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான ஆண் பக்தர்கள் வயது வித்தியாசமின்றி கலந்து கொண்டனர். இந்த கிராம திருவிழாவில் முக்கிய நிகழ்வாக பக்தர்கள் ஒன்று திரண்டு ஒருவர் மீது ஒருவர் சேற்றினை அடித்தும் சேத்தாண்டி வேடம் பூண்டும் ஊருக்குள் ஊர்வலமாக வந்து முத்தாலம்மனை வேண்டினர்.சேற்றை அடித்து வேண்டுவதால் தங்களுக்கு நோய் நொடிகள் வருவதில்லை எனவும் கிராம மக்களால் கூறப்படுகின்றது.
சுமார் 200 வருடங்களாக தொடரும் இந்த வினோத திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் ஒருவர் மீது ஒருவர் சேற்றை அடித்து வேண்டுதலை நிறைவேற்றுகின்றனர்.மேலும் ஊருக்குள் விவசாயம் செழிக்கவும் அனைத்து தரப்பு மக்களும் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்கின்றனர், சேற்றுடன் ஊருக்குள் வந்து பலவகையான கலர் பொடிகளை தூவி கொண்டாடி மகிழ்கின்றனர், இரண்டு வருடத்துக்கு ஒருமுறை நடக்கும் இந்த வினோத திருவிழாவில் பல ஊர்களில் இருந்தும் வருகை புரிந்த பக்தர்களும் திரளாக கலந்துகொண்டதும் குறிப்பிடத்தக்கது.