கீழக்கரையில் இலவச கண் சிகிச்சை முகாம்

ராமநாதபுரம் இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை புது கிழக்குத் தெரு பொதுநல சங்கம் மற்றும் டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனை இணைந்து நடத்திய இலவச கண் பரிசோதனை முகாம் ஆயிஷா பள்ளியில் நடைபெற்றது, இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பார்கள் சங்கத்தின் கெளரவ ஆலோசகர் அப்துல் ஹமீது,கிழக்குத் தெரு முஸ்லிம் ஜமாஅத் செயலாளர் ஜனாப் ரஷீது அலி,பழைய குத்பா பள்ளி ஜமாஅத் பரிபாலன கமிட்டி முன்னாள் செயலாளர் ஜெய்னு தீன்,கீழக்கரை கல்வி தர்ம அறக்கட்டளை தலைவர் முஹம்மது மன்சூர்,இந்திய தவ்ஹீத் ஜமாஅத் மாவட்ட அமைப்பாளர் பஷீர் அகமது ஆகியோர் கலந்து கொண்டு முகாமை துவக்கி வைத்தனர். நகர் மன்ற உறுப்பினர்கள் சித்திக், ஷேக் ஹுசைன், நவாஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இம்முகாமில் கண்பார்வை குறைபாடுகள்,கிட்டப்பார்வை மற்றும் தூரப்பார்வை,கண் புரை,கண்ணில் சதை வளர்ச்சி,கண்ணில் நீர் அழுத்தம்,ஒற்றை தலைவலி,கண் சம்பந்தமான அனைத்து நோய்களுக்கும் ஆலோசனை வழங்கப்பட்டு 200க்கும் மேற்பட்ட நபர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டது.

நிகழ்ச்சி ஒருங்கிணைப்பை,புது கிழக்கு தெரு சங்கத்தின் நிர்வாகிகள் சீனி, ஹமீது, ஃபரூஸ், சதக்கத்துல்லாஹ், சுல்தான், அலாவுதீன் ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை வளைகுடா வாழ் புது கிழக்குத் தெரு பொதுநல சங்கம் நண்பர்கள் செய்தனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *