விடுமுறை அறிவிக்காததால் மாணவ – மாணவிகள் நனைந்தபடி பள்ளிக்கு சென்றனர்!!
வங்கக்கடலில் உருவாகி யுள்ள காற்றழுத்த தாழ்வு காரணமாக தமிழகத்தின் வடபகுதி மற்றும் டெல்டா. தென் கடலோர பகுதி மாவட்டங்களில் பலத்த மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. அதன் படி இன்று அதிகாலை முதல் மதுரை மாவட்டத்தில் மழை பெய்ய தொடங்கியது. பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பதை அந்தந்த பள்ளியில் தலைமை ஆசிரியர்களே முடிவு செய்து கொள்ளலாம் என மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப் பட்டது. மாவட்டத்தில் விடுமுறை குறித்த எந்த அறிவிப்பும் வெளியாக வில்லை. தற்போது அரையாண்டு தேர்வு நடைபெற்று வருவதால் விடுமுறை அறிவிக்க வில்லை என்றும் கூறப்படுகிறது. இதனால் பெற்றோர்கள் பள்ளிசு ளுக்கு விடுமுறை அளிக்கப் படுமா? என எதிர்பார்ப்பு டன் காத்திருந்தனர். தொடர்ந்து மழை பெய்து வந்த நிலையில் விடுமுறை அறிவிப்பு வெளியாகாததால் பெற்றோர்கள் அதிருப்தி அடைந்தனர். அதை தொடர்ந்து தங்களது குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பி வைப்பதற்காக மழைகோட் மற்றும் குடைகளை பிடித்து கொண்டு சென்றனர். இதில் ஏராளமான குழந்தைகள் மழை யில் நனைந்தவாறு பள்ளிக்கு சென்றனர். அதிகாலை முதல் பரவலாக மழை பெய்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
மதுரை மாநகர பகுதி சாலைகளில் தாழ்வான இடங்களில் மழைநீர் செல்ல வழியின்றி தேங்கி குளம் போல் காணப்படுகிறது. இதனால் வேலைக்கு நடந்து செல்பவர்கள், இரு சக்கர வாகனங்களில் செல்பவர்கள் கடும் சிரமத்திற்குள்ளாகி உள்ளனர்.
மதுரையில் பெய்து வரும் மழையால் பொது மக்களின் இயல்புவாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.