தேனியில் வணிகர்கள் சங்கம் சார்பில் வாடகை கடைகளுக்கான 18% ஜிஎஸ்டி வரியை ரத்து செய்யக்கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு தேனி மாவட்ட வணிகர்கள் சங்கம் சார்பில் அதன் தலைவர் செல்வக்குமார் தலைமையில் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆர் வி ஷஜீவனா அவர்களிடம் வணிகர்கள் மனு வழங்கினார்கள்
மனு விபரம் வாடகை கடை மற்றும் கட்டிடங்களுக்கான மத்திய அரசு விதித்துள்ள 18% ஜிஎஸ்டி வரி விதிப்பை ரத்து செய்ய வேண்டும் வணிக நிறுவனங்களின் கட்டடங்களுக்கு ஏற்கனவே 2008இல் வரி உயர்த்தப்பட்டுள்ளது
மேலும் வருடம் தோறும் 6 % சொத்து வரி விதித்து வருவதை திரும்ப பெற வேண்டும் வணிக உரிமை தொழில் வரிகளின் கட்டணம் உயர்வை திரும்ப பெற வேண்டும் தமிழ்நாடு வணிகர்கள் மட்டுமில்லாமல் தேனி மாவட்ட வணிகர்கள் மீது மத்திய அரசு திணிக்கின்ற நியாயமற்ற ஜிஎஸ்டி வரி விதிப்பை கைவிட வேண்டும் வணிகர்களிடம் சோதனை என்ற பெயரில் வருவாய்த்துறை உணவுப் பாதுகாப்பு துறை தொழிலாளர் நலத்துறை ஆகிய அதிகாரிகளின் அநியாய அபராத கட்டண வசூலை தடுத்து நிறுத்த வேண்டும் மாநகராட்சி நகராட்சி பேரூராட்சி ஊராட்சி ஆகிய உள்ளாட்சி அமைப்புகளின் குப்பை வரிகளை மாநிலம் முழுவதும் சீராக்க வேண்டும் வணிக உரிமம் புதுப்பித்தலை மூன்றாண்டுகளுக்கு ஒருமுறை என்பதை நடைமுறைப்படுத்த வேண்டும்
மாத மாதம் மின்சார ரீடிங் எடுத்து மாதந்தோறும் மின் கட்டணம் செலுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் திருமண மண்டபத்தில் முகாம் என்ற பெயரில் தனியார் நிறுவன வணிகத்தை தடை செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை மாவட்ட ஆட்சியரிடம் வழங்கினார்கள்
இந்த நிகழ்வில் வணிக பேரமைப்பின் மாநிலத் துணைத் தலைவர் கே எஸ் பெருமாள் கம்பம் வர்த்தக சங்கத் தலைவர் எல் வேல்முருகன் துணிந்து நில் அறக்கட்டளை தலைவரும் ரத்னா எலக்ட்ரிக்கல் உரிமையாளரும் எம் வேல் பாண்டியன் உள்பட தேனி மாவட்ட வணிகர் சங்க நிர்வாகிகள் ஏராளமானோர் உடன் இருந்தனர்