எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி

சீர்காழி அருகே பூம்புகாரில் ரூ 23 கோடியில் நிறைவுற்ற சுற்றுலாத்தல மேம்பாட்டுப் பணிகள் காணொலி காட்சி மூலம் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார்.

சரித்திர புகழ்பெற்ற பூம்புகார் சுற்றுலா வளாகத்தில் ரூ.23.60 கோடி மதிப்பீட்டில் புனரமைக்கப்படும் என தமிழக முதலமைச்சர் அறிவித்திருந்தார். அதன்படி சுற்றுச் சுவர், அலங்கார வளைவுகள், சுற்றுலா அலுவலகம், வரவேற்பு அறை, சுகாதார வளாகம், பண்டைய பாய்மர கப்பல் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களைக் கொண்டு புனரமைப்பு பணிகள் நிறைவடைந்தன.

நிறைவுற்ற சுற்றுலாத்தல மே ம்பாட்டு பணிகளை காணொலிக்காட்சி மூலம் தமிழக முதலமைச்சர் மு .க .ஸ்டாலின் தொடக்கி வைத்தார். இதை அடுத்து பூம்புகார் சுற்றுலா வளாகத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த் தலைமையில்,
சட்டமன்ற உறுப்பினர்கள் நிவேதா எம் முருகன், எம் பன்னீர்செல்வம், ராஜ்குமார், முன்னிலையில்
தமிழக பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் மெய்யநாதன் கலந்து கொண்டு குத்து விளக்கு ஏற்றி வைத்தார். பின்னர் பாய் மரக்கப்பல் மாதிரி அமைக்கப்பட்டுள்ள இடத்திற்கு முன்பாக அமைச்சர் உள்ளிட்டோர் குழு புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *