கரூர் செய்தியாளர் மரியான் பாபு
கரூர் மாவட்டத்தில் கனிமவளக் கொள்ளை நடப்பதை படம் பிடிக்க சென்ற செய்தியாளர்கள் தாக்கப்பட்டதற்கு நாம் தமிழர் கட்சியின் சார்பில் கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மாநில ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார் சார்பில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த கட்சியின் ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார் கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் அருகே உள்ள சிவாயம் பகுதியில் அரசு நிர்ணயிக்கான அளவை தாண்டி கனிமவளக் கொள்ளை நடைபெற்று வருகிறது இது சம்பந்தமாக பலமுறை நாம் தமிழர் கட்சி சார்பிலும் கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் செய்தி சேகரிக்கு சென்ற போது அலர்களுடைய பொருட்களை சேதப்படுத்தி உள்ளனர். இந்த நிகழ்வு கண்டிக்கத்தக்கது.இது சம்பந்தமாக நாம் தமிழர் கட்சியின் சார்பிலும் கண்டன அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. ஊடக சங்கங்கள் கடுமையான கண்டனங்களை தெரிவிக்க முன்வர வேண்டும் எந்த கட்சி மாறினாலும் அரசு அதிகாரிகள் செய்ய தவறுவது வேதனை அளிக்கிறது என்று தெரிவித்தார்.